பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

கலைச் சொல்லாக்கத்தில மணவையாரின் பங்கும் பணியும்


பேருழைப்பிற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. ஏனைய மூன்று மொழிகள் யுனெஸ்கோ தலைமையமான பாரிஸ் நகரத்திலிருந்தே வெளிவரும் ஆங்கில, ஸ்பானிய மற்றும் ஃபிரெஞ்சு மொழி இதழ்கள் ஆகும்.

கூரியர் மாத இதழில் பல்வேறு நாட்டினரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம்பெறுகின்றன. அவற்றைக் கால தாமதமின்றி உடனுக்குடன் வெளியிடுவதென்பது ஓர் இமாலயச் சாதனை. அறிவியல் நூல் ஒன்றினைத் தமிழியே எழுதுவதென்றால் அதற்கு நிரம்பக் கால அவகாசம் கிடைக்கும். ஆனால் பத்திகைகளுக்கு என்றால், அந்த அளவு கால அவகாசம் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் பத்திரிகை வெளி வரவேண்டும். எனவே புதிய கண்டுபிடிப்புகளை அறிவியல் சிந்தனைகளைக் குறிப்பிட்ட காலத்தில் உடனுக்குடன் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ள பெருமைக்குரியவர் முஸ்தபா. இம்முயற்சியில் அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் முதலானதுறைகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான கலைச் சொற்கள் அவர்தம் உழைப்பின் பயனாகத் தமிழ்க் கலைச் சொற்கோவையில் இடம் பெற்றன.

கலைச் சொல் தொகுதிகள், அகராதிகள், களஞ்சியங்கள்

தமிழ்க் கலைச் சொல் களஞ்சியங்களின் வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் பெரும்பாலானவை வெறும் கலைச் சொற் பட்டியல்களாகவே இருப்பதைக் காணலாம். இக்கலைச் சொல் தொகுதிகளில் ஆங்கிலம் அதற்குரிய தமிழ்ச் சொல் என்ற வகையில் சொற்கள் அமையும் வரைவிலக்கணத்துடன் கூடிய கலைச் சொற்களை, அகராதிகளாக வெளியிடும் முயற்சிகள் அண்மைக் காலத்தில்தான் தோன்றி