பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் இராதா-செல்லப்பன்

131


யுள்ளன. ஓரிரு அகராதிகள், ஆங்கிலம் - தமிழ் கலைச் சொற்கள் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. களஞ்சியங்கள் என்று பார்த்தால். திரு. பெரியசாமித்துரன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற கலைக் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவியல் கலைக் களஞ்சியம், வாழ்வியல் கலைக் களஞ்சியம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். எனவே களஞ்சியங்கள் என்ற அளவிலும், தமி ழிலே விரல்விட்டு எண்ணக் கூடிய நிலையில்தான் பதிப் புக்கள் நடைபெற்றுள்ளன. இச்சூழலில் காலத்தின் இன்றிய மையாத தேவையைக் கருத்தில் கொண்டு, பல கலைச் சொல் களஞ்சியங்களைக் கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் ஐந்து கலைச் சொல் களஞ்சியங்களை நமக்கு மணவையார் தந்திருக்கிறார். 'அறிவியல் கலைக் களஞ்சியம்' என்ற பெயரில் இரு தொகுதிகள் மணவையாரால் பதிப்புப் பெற்றுள்ளன. முதல் தொகுதி 1990லும் இரண்டாம் தொகுதி 1993லும் வெளிவந்தன. இத்தொகுதிகளில் மொத்தத்தில் 52 அறிவியல் பிரிவுகளுக்கான கலைச் சொற்கள் வரைவிலக்க ணத்துடன் தரப்பட்டுள்ளன. இவ்விரண்டு தொகுதிகளிலுமாக ஏறத்தாழ 10,000 கலைச் சொற்கள் விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன. இக்கலைச் சொற்களஞ்சியங்களின் முன்னுரையில் இக்கருவி நூல்களின் தனித் தன்மையை விளக்கு கிறார் ஆசிரியர். 'சாதாரண கலைச் சொல் அகராதி'களினின்றும் இஃது சற்று வேறுபட்டது. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்க் கலைச் சொற்களைக் கொடுப்பதை விட அச்சொல்லின் செயற்பாட்டு வினை சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொற்பொருள் பெற இயல்கின்றது. இதனால், இதனினும் சுருங்கிய வடிவிலான சொற் செட்டும் பொருட் செறிவுமுடைய நயமிக்க கலைச் சொற்களை ஆர்வமுடையவர்கள் நாளை உருவாக்க வழியேற்படலாம். ஒவ்வொரு கலைச் சொல்லின் வாயிலாக