பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். பூவணணன்

103


ரத்தைப் பறிக்கக் கூடாது என்பதை, மானை விரட்ட, மனி தனைத் தன் முதுகில் சுமந்து அடிமையான குதிரைக் கதையைச் சொல்கிறார், முடிவில் மணியும் சுதந்திர நாளின் சிறப்பை உணர, கோமதி, ரகு, மணி மூவரும் பள்ளியின் சுதந்திர நாளில் கலந்து கொள்ள புறப்படுகின்றனர்.

இது கதை போலச் சொல்லப்பட்டுள்ள கருத்துக் குவியல்.

சுதந்திரத்தின் உண்மைப் பொருளை இளம் வயதிலேயே உணர்த்த வேண்டியது அவசியமாகும். அப்போது தான் தாங்கள், சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதோடு மற்றவர்களின் சுதந்திரத்தையும் மதித்து நடப்பார்கள். இதனால் நாட்டு நலன் மட்டுமல்லாது சர்வதேச நலனே பாதுகாக்கப்படும். இந்த உண்மையை இளம் உள்ளங்கள் ஏற்கும் வண்ணம் எழுதப்பட்டதே இந்நூல்' என்று ஆசிரியர் கூறுகிறார். அதனால்தான் இதை, 'சிறுவர்க்கான சிந்தனை நூல்' என்கிறார் ஆசிரியர்.

சிந்தனை நூல் என்பது உண்மை.

இது சிறந்த கதை நூல் என்று சொல்வதும் உண்மை.

சீரிய கருத்துகளை சிறந்த நாவல் வடிவில் தந்தவர் இர்விங் வாலஸ் என்னும் சிறந்த எழுத்தாளர். அதனால் திறானாய்வாளர்கள் அவற்றை "FICTION" (புனை கதை) என்று மட்டுமே சொல்ல விரும்பவில்லை. மிகச் சிறந்த உண்மைகளை (FACTS), கதை வடிவில் (FICTION) கூறிய வாலஸ் நாவல்களை, "Faction" என்னும் புதுப் பெயரால் சிறப்பித்தார்கள். கதையும் (Fiction) கருத்துகளும் (facts) இணைந்த நாவல் என்ற பொருளில் "Faction" என்று வழங்கியது பொருத்தந்தானே!