பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19


நினைத்துக்கொண்டிருக்கிறாய்? என்ன இருந்தாலும் வளர்ப்புக் குழந்தை நம் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு ஈடாகுமா என்கிறாயா அல்லது "அவள் மலடி” என்ற அவச்சொல்லை அழித்துக் கொள்வதற்காகக் குழந்தை கேட்கிறாயா?"

"ஆண் பிள்ளைகளைப் போல பெண்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடமாட்டார்கள். அப்படிப் பேசவும் கூடாது. ஆண்கள் கலகலப்பாகப் பேசிளுல் அவர்களை விஷயமில்லாதவர்கள் என்பார்கள். பெண்களும் அப்படியே பேசினால் 'இவள் சுத்த வெகுளி' என்று இகழ்ந்து தள்ளிவிடுவார்கள். புருஷனுக்குத் தெரியாத ரகசியங்கள் கூட ஒரு பெண்ணிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அவள் பெண். விரித்த புகையிலையும், சிரித்த பெண்ணும் ஆகாது என்று சொன்னது எதற்காக?" கண்ணாத்தாளும் விட்டபாடில்லை.

"அது சரி...... இன்றைக்கென்ன இவ்வளவு தத்துவார்த்தங்களைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கிறாய்?"

"இது நீங்கள் படித்துவிட்டுப் பேசும் வேதாந்தமல்ல; உண்மைகளை நான் சொல்லுகிறேன். ஒரு பெண் - அதுவும் குழந்தைப் பேற்றுக்காக தவம் கிடக்கும் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவள் மனம் என்ன பாடுபடுகிறது என்பதை புருஷன் தெரிந்துகொள்ள வேண்டாமா?”

நீ உன் வாதத்தில் பிடிகொடுத்து விட்டாய்! புருஷனுக்குத் தெரியாத ரகசியம் ஒரு பெண்ணிடம் இருக்கலாம் என்கிறபோது ஊருக்குத் தெரியாத ரகசியம் ஒரே குடும்பத்திற்குள் இருப்பது தவறில்லையே?"

புருஷனுக்கும், பெண்ஜாதிக்குமிடையே எவ்வளவோ ரகசியங்கள் இருக்கலாம். அதெல்லாம் ஊருக்குத் தெரிந்தால் குடும்பம் உருப்படுமா?'

ன்று சனிக்கிழமை. துறைமுகத் தொழிலாளர்களுக்கு அன்றுதான் சம்பளநாள். கண்ணப்பன் வட்டிப்பணத்தை வசூலிப்பதற்காகப் புறப்பட்டுப் போனான். விழியில் அவன் நினைவெல்லாம் கண்ணாத்தாளைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அவளுடைய கலங்கிய விழிகளில் துறைமுகப்பட்டணமே. மிதப்பது போல அவனுக்குத் தோன்றியது. ஓவியம் போன்ற தன் மனைவி குழந்தையில்லாக்கவலையால் ஒட்டி உலர்ந்து சருகாகி விடுவாளோ என்ற துக்கம் ஒருபக்கம் அவனை அழுத்திக்கொண்டிருந்தது.