பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மனிதன் படுத்துக் கொண்டு சிந்திப்பதைவிட நடந்து கொண்டு சிந்திப்பதையே அதிகம் விரும்புகிறான்: அதில்தான் அவன் சுகமும் காண்கிறான். கண்ணப்பன் துாரம் தெரியாமல் போய்க்கொண்டே இருந்தான், அப்போது . கண்களில் ஒரு டீ ஸ்டாலின் போர்டு தென்பட்டது. அதில் 'கொரியன் டீ ஸ்டால்” என்று எழுதப்பட்டிருந்தது. கண்ணப்பனுக்கு பழைய நினைவுகள் திடீரென்று பிரசவித்து விட்டன.

கண்ணப்பன் கண்டியில் இருந்தபோது அவனாேடு நெருங்கிப் பழகிய ஒரு நண்பனின் பெயர் கொரியன். அவன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவன் கண்டியில் டாக்டராக இருந்துவிட்டு கண்ணப்பனுக்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டான். தென்னிந்தியர்கள் என்ற முறையில் இருவரும் உற்ற நண்பர்களாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல; இருவரும் ஒரே தேகப் பயிற்சி சாலையில் தேகப் பயிற்சி எடுத்தவர்கள். அவர்களின் நட்பே கர்லாக் கட்டைகளுக்கு மத்தியில்தான் உதயமானது.

கண்ணப்பனுக்கு டாக்டர் கொரியனைப் பார்க்க பெரிதும் ஆசை! அவனைச் சந்தித்து தனது மனக் கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தான். கடிதம் எழுதினால் அது போய்ச் சேருமா, சேராதா என்று கூட யோசிக்காமல் மறுநாளே ஒரு கடிதத்தை எழுதிப்போட்டான். திருவனந்தபுரம் ஒரு பெரிய நகரம்; மொட்டையாக 'கொரியன்’ என்று மட்டும் எழுதிப் போட்டால் கிடைத்துவிடுமா? கொரியன் என்ன அரசியல்வாதியா, பெயரைப் பார்த்ததும் கடிதம் வீடு போய்ச் சேர்வதற்கு?

பதினைந்து நாட்கள் வரை பதில் இல்லை. திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கண்ணப்பன் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுப் போனான். அங்கு கொரியன் என்ற பெயரில் பல டாக்டர்கள் இருந்தார்கள். எல்லோரையும் பார்த்தான். உருவம் மட்டுப் படவில்லை. இறுதியில் கண்ணப்பன் விரக்தியடைந்து எர்ணாகுளத்திற்குத் திரும்பும் போது அவனுடைய நண்பன் டாக்டர் கொரியனைப்பற்றி வியப்புறும் செய்தி கிடைத்தது. திருவிதாங்கூர் மன்னரின் டாக்டரே கண்ணப்பனின் நண்பர் காெரியன் தான் என்பதை அறிந்து அளவில்லா மகிழ்ச்சியடைந்து அவனை நேரில் சென்று பார்த்துவிட நடந்தான்.

கொரியன் வயதில் இளைஞன். கண்ணப்பன் வயதுதான் அவனுக்கும். பழைய பாணியில் கேரள நாட்டு முறையில் கட்டப்பட்ட அரண்மனை போன்ற ஒரு மாளிகையில் கொரியன் குடியிருந்தான். சுவரில் பலபடங்கள் மாட்டப்பட்டிருந்தன. கண்ணப்பன் அவனைக் கண்டதும் கட்டித் தழுவி அணைத்துக் கொண்டான்.

"பத்தாண்டுகளுக்குப் பிறகு என் நினைவு உனக்கு