பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



23


"நீ ஏன் நெற்றியைச் சுளிக்கிறாய்? உனக்கும் அப்படி இருக்குமோ என்ற அச்சம்தானே?" என்று வினவினன் கொரியன்.

"அப்படி ஒரு பீதி எனக்கு! உனக்கு ஏதாவது காரணம் சொன்னாரா டாக்டர்?"

"நானே நேரில் சென்று கேட்ட பின்புதான் அவர் காரணத்தைச் சொன்னர். எனது ரத்தம் அடியோடு முறிந்து போய்விட்டதாம். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஒரு மனிதனின் உடலுறுப்புக்கள் ஒரு விமானத்தின் எஞ்சினை விட துணுக்கமானவை என்கிறார் அந்த டாக்டர். என்னுடைய ரத்தம், எனது திருமணத்திற்கு முன்பே முறிந்து விட்டது என்கிறார் அவர். எனக்கு அப்போதே விபரம் தெரிந்திருந்தால் நான் திருமணமே செய்துகொண்டிருக்க மாட்டேன். நம் நாட்டில் எல்லோரும், திருமணத்திற்குப் பிறகுதான் வாழ்க்கையே துவங்குகிறது என்று நினைக்கிறார்கள். அதனால் விளைந்த வினையைப் பார்த்தாயா?"

கண்ணப்டன் பதில் சொல்ல முடியாமல் திணறினான், அவனுக்கு குடைராட்டினத்தில் உட்கார்ந்து சுற்றுவது போலிருந்தது.

"சிங்கம் போலச் சீறிப் பாயக் கூடியவன், இன்று எப்படியோ போய் விட்டானே! அவன் பேச்சில் இருந்த கம்பீரம், அவன் குரலில் இருந்து மிடுக்கு - எல்லாமே இருந்த தடம் கூடத் தெரியாமல் அழிந்து விட்டதே?" என்று கண்ணப்பன் மனத்துக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

"நீயும் அந்த டாக்டரிடம் சோதித்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். முடிவு செய்ய வேண்டியது உன் உரிமை!"

"எனக்கும் அதுதான் முடிவாக இருந்தால் என்ன செய்வது கொரியன்?" கண்ணப்பன் நடுக்கத்துடன் கேட்டான்.

'"முடிவு அது தான் என்ருல் அதை எப்படி மாற்ற முடியும்? அதைத் தான் விதி என்றும், தலையெழுத்து