பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு. அறிவானந்தம்

161


ஒன்று, இஸ்லாமியச் சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் இளைமையில் இஸ்லாம் குறித்து போதிய அறிவுத் தெளிவு பெற வாயப்பில்லாத நவீன வாழ்க்கைச் சூழலில் வளர்ந்து வர நேர்ந்துள்ளது. இவ்வாறு சின்னஞ்சிறு வயதில் தவிர்க்க முடியாத நிலையில் இஸ்லாமிய அறிவைப் பெற இயலாமற்போன அவர்கள் இஸ்லாமியத் தகவல்களைப் படித்தறிய வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டவர்களாக இருப்பதையும் நான் அறிவேன். அவர்கட்கேற்ற எளிய சொல்லாட்சியோடு இனிய நடையில் கையடக்க நூலாகத் தந்தால் அவர்கட்குப் பெரிதும் பயன்படும் என்ற என் உள்ளுணர்வின் விளைவே இந்நூல். அத்துடன் முஸ்லிமல்லாதவர்கட்கும் இஸ்லாமியத் தகவல்களை வேற்று மொழித் தடையின்றித் தமிழில் படித்தறிய எளிதாக இருக்கும் என்பது என் கருத்தாக இருந்தது."

இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் நூலை அல்ஹாஜ் எம்.ஆர். எம். அப்துற்-ரஹீம் அவர்களின் இஸ் லாமியக் கலைக் களஞ்சியத் தொகுதிகளை வழி நூலாகக் கொண்டே உருவாக்கியுள்ளார் மணவையார். இந் நூலின் பயன்பாடு எத்தகையதாயிருக்கும் என்பதை இந்நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் பன்னூலாசிரியர் எம்.ஆர். எம். அப்துற்-ரஹீம் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்:

"குழந்தைகளுக்கான இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் தமிழ் மொழியில் இல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. அதனை நிறைவு செய்யும் வகையில் கலை மாமணி மணவை முஸ்தபா அவர்கள் குழந்தைகள் படித்துப் புரிந்து பயனடைய ஒரு கலைக் களஞ்சியத்தை எளிய, இனிய தமிழில் தயாரித்துள்ளார்கள். இதன் பக்கங்களைத் தேவைப்படும் பொழுது மட்டும் திருப்பிப் பார்க்காமல் ஒரு நாளைக்கு சில பக்கங்கள் வீதம் தொடக்கம் முதல் இறுதி


11