பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறங்களின் செறிவைப் பிரிக்கும் கருவி.

8. லெயிடன் உருளை என்பது யாது?

கண்ணாடி உருளையிலான மின்தேக்கமானி. 1745இல் லெய்டன் என்பவர் அமைத்தது.

9. லிபிக் குளிர்விப்பி என்பது யாது?

லிபிக் என்பவர் ஜெர்மன் கரிம வேதியியலார். இவர் பெயரால் அமைந்தது இக்கருவி. ஆய்வகத்தில் தயாரிக்கும் பொருள் ஆவியாக இருக்குமானால், அதைக் குளிர்வித்து நீர்மமாக்கப் பயன்படுவது.

10. கிப்பின் கருவி என்பது யாது?

வேதிப்பொருள் செய்யப் பயன்படும் ஆய்வகக் கருவி. எ-டு அய்டிரஜன் சல்பைடு.

11. ஜெல்டால் குடுவையின் பயன் யாது?

ஜெல்டால் முறையில் நைட்ரஜனை மதிப்பீடு செய்யப் பயன்படுவது. இம்முறை பருமனறி பகுப்பாகும்.

12. உலர்த்துவான் என்றால் என்ன?

ஆவியாதல் மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது.

13. பைடட்குழாய் என்பது யாது?

பாய்ம விரைவை அளக்க உதவுங் கருவி.

14. தெள்ளளவுமானி என்றால் என்ன?

வேதிவினைகள் நடைபெறும்பொழுது வளிப்பருமனால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியுங் கருவி.

15. உப்புச்செறிவுமானி என்றால் என்ன?

உப்புக்கரைசல்களின் செறிவைக் காணும் கருவி.

16. புன்சன் எரிப்பான் என்றால் என்ன?

எளிய வளிஎரிப்பான். எரிவதற்கு முன் வளியுடன் போதிய அளவுக்குக் காற்றைக் கலக்கக் குறைந்த அளவுள்ள சுடர் உண்டாகும். இதற்குப் புன்சன் சுடர் என்று பெயர். இச்சுடருக்கு அதிக வெப்ப ஆற்றல் உண்டு.

17. உலர்த்தும் பாண்டம் என்றால் என்ன?

வேதிப்பொருள்களை உலர்த்துவதற்குரிய கருவி-