பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48



மாறுபாடு அடையச் செய்யும் வேதிப் பொருள். இது வேதிவினையை விரைவுப் படுத்துவது.

75. வினையூக்கியின் வகைகள் யாவை?

1. கனிம வினையூக்கி - மாங்கனிஸ் - இரு - ஆக்சைடு

2. கரிம வினையூக்கி - நொதிகள்.

76. வினையூக்கம் என்றால் என்ன?

வினையூக்கியால் ஏற்படும் வேதிச்செயல்.

77. ஆல்டால் வினை என்றால் என்ன?

இதில் ஓர் ஆல்டிகைடின் இரு மூலக்கூறுகள் எரிசோடா முன்னிலையில் சேர்ந்து ஓர் ஆல்டாலைக் கொடுக்கும்.

78. வெண்ணாவி என்றால் என்ன?

ஆல்கேன் கலவை. கரைப்பான். வண்ணத்தொழிலில் பயன்படுவது.

79. டையசோவாக்குதல் என்றால் என்ன?

நறுமண அமைன் (அனிலைன்) குறைந்த வெப்பநிலையில் நைட்டிரசக் காடியோடு வினையாற்றுதல்.

80. கரிமப்படுவினை என்றால் என்ன?

இவ்வினையில் கரிம வேதிப்பொருளில் நைட்ரோ தொகுதி சேர்க்கப்படுகிறது.

81. கூட்டுவினை என்றால் என்ன?

எத்திலீன், அசெட்டலீன் ஆகியவை புரோமின் கரைசலுடன் வினையாற்றி, அக்கரைசலை நிறமற்றதாக்கும் வினை.

82. கன்னிசாரோ வினை என்றால் என்ன?

பென்சால் - டி - கைடை ஒரு கார அடர்கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும்பாழுது பென்சைல் ஆல்ககாலாகவும் பென்சாயிகக் காடியாகவும் அது மாறும்.

83. பையூரெட் ஆய்வு என்பது என்ன?

இது புரதங்களையும் அவற்றின் வழிப் பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. ஆய்வுக் கரைசலுடன் முதலில் சோடியம் அய்டிராக்சைடு சேர்க்கப்படுகிறது. பின் அதனுடன் செம்புச் (II) சல்பேட்டு துளித்துளியாகச்