பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


தணிக்கும். ஊடுருவி ஊக்கம் அளிக்கும்.

74. ஒற்றி என்றால் என்ன?
கம்பளம், பஞ்சு முதலிய துண்டுகள் புண்களைத் துடைக்கவும் குருதியை அறுவையின் பொழுது நீக்கவும் பயன்படுவது.

75. ஓசோனின் பயன் யாது?
ஒரு தொற்று நீக்கி

76. கேயோலின் என்றால் என்ன?
சீனக் களிமண். அலுமினியத்தின் நீரேறிய சிலிகேட்

77. இதன் இரு வகைகள் யாவை?
1. கன கேயோலின் : ஒற்றடை செய்ய. 2. இலேசான சேயோலின் : இது ஒரு பரப்பூன்றி; எரிச்சல் அடக்கி, ஆகவே, கழிச்சல் கலவை மருந்தாகப் பயன்படுவது.

78. ஓரிமங்கள் என்றால் என்ன?
ஓரிடத் தனிமங்கள். வேறுபட்ட நிறையும் ஒரே அணு எண்ணும் கொண்ட ஒரு தனிமத்தின் அனுக்கள். கதிரியக்கத் தனிமங்கள். மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்தவும், நோயறியவும் பயன்படுபவை.

79. நாண் பொருள்கள் என்பவை யாவை?
பட்டுநூல், கம்பி, நைலான் முதலியவை. இவை தமனிகளைக் கட்டவும் திசுக்களைத் தைக்கவும் பயன்படுபவை. தையல் பொருள்கள் என்றுங் கூறலாம்.

80. ஒட்டுத்துணி என்றால் என்ன?
தளர்ச்சியாக நெய்யப்பட்ட பஞ்சுப் பொருள். ஒரு பக்கம் மென்மையாகவும் மற்றொரு பக்கம் கரடாகவும் இருக்கும். மென்மைப் பகுதி தோலுடன் ஒட்டுமாறு செய்யப்படும். அறுவை ஒத்தடங்களுக்கும் பதவாடைகளுக்கும் பயன்படுவது.

81. தடவுபொருள் என்றால் என்ன?

நுண்ணோக்கியில் ஆய்ந்து பார்க்க, நீர்ம நிலையில் குருதி முதலிய பொருள்களைச் சிறிது கண்ணாடி வில்லையில் தடவுதல்.