பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. 18. 19. 20. 21. 22. 25. 24. 25. 32 தொடக்கமோ முடிவோ இல்லை. விண்கோளம் என்றால் என்ன? முடிவிலா ஆரமுள்ள கற்பனைக் கோளம். இதில் விண் பொருள்கள் அடங்கியுள்ளன. விண்நடுக்கோடு என்றால் என்ன? விண்கோளப் பெருவட்டம். விண்கோளத்தை இது வட தென் கோளங்களாகப் பிரிப்பது. விண்விசை இயல் என்றால் என்ன? விண் பொருள்களுக்கிடையே உள்ள விசைகள், இயக்கங்கள் ஆகியவற்றை ஆராயுந் துறை. நியூட்டன் இயக்க விதி, ஈர்ப்பு விதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. ஏவிய பின் செயற்கை விண்பொருள்களையும் ஆராய்வது. பால் வழி என்பது என்ன? இப்பால் வழியின் ஒரு சிறு பகுதியே கதிரவன் மண்டலம். பால் வழி என்பது விண்ணகத்திலுள்ள 10 பில்லியன் விண்மீன் கூட்டங்களில் ஒன்று. விண்மீன்களுக்குக் கோள்கள் உண்டா? உண்டு என்று தெரிகிறது. புவி வேதிஇயல் என்றால் என்ன? புவியின் இயைபையும் அதன் தொடர்பான செயல்களை யும் ஆராய்வது. புவி இயற்பியல் நிகழ்ச்சிகள் யாவை? 1. புவிக் காந்தம். 2. கதிரவன் செயல். 3. வளர் ஒளிகள். புவிக்காந்தம் என்றால் என்ன? இது புவியின் முதன்மைக் காந்தப் புலமாகும். இரு முனைகள் கொண்டது. சுழலும் முனைகளிலிருந்து 11" அளவுக்கு அருகில் அமைவது. புவியின் உள்ளகத்தில் கடத்தக்கூடிய இரும்பு நீர்மம் உள்ளது. இதன் இயக்கங்களால் புவிக் காந்தம் ஏற்படுகிறது. வில்லியம் கில்பர்ட்டின் அரும்பணி யாது? இவர் ஆங்கில இயற்பியலார் (1540 - 1603). புவிக் காந்தத்தை விரிவாக ஆராய்ந்து, காந்தங்களைப் பற்றி என்னும்