பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 3. புவி அமைப்பியல் புவி அமைப்பியல் (geology) என்றால் என்ன? புவித் தோட்டின் வரலாறு, வளர்ச்சி மற்றும் அதிலுள்ள திணை உயிரிகள் ஆகியவற்றை ஆராயுந்துறை கிரேக்க மெய்யறிவாளர் தேல்ஸ் வற்புறுத்தியது யாது? இவர் கி.மு. 6 இல் வாழ்ந்தவர் புவியின் மேற்பரப்பை வடிவமைப்பதில் நீருக்குச் சிறந்த பங்குண்டு என்று வற்புறுத்தினார். . அரபு மெய்யறிவாளர் ஆவிசென்னா கூறியது யாது? இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். உயர் நிலங்களின் அரிப்பால் மலைகள் தோன்றின என்றார். லியோனார்டோ கூறியது யாது? இவர்தம் கருத்தை 1508 இல் கூறினார். 1. ஆவிசென்னா கருத்தை வற்புறுத்தினார். 2. ஆறுகள் மழையினாலும் பனியினாலும் உண்டா கின்றன. 3.தொல்படிவங்கள் பழங்காலத்தில் வாழ்ந்த உயிர்களின் எச்சங்களே. 17 ஆம் நூற்றாண்டில் உயர் திருச்சபையாளர் ஜேம்ஸ் அஷர் கூறியது யாது? கி.மு. 4004 இல் அக்டோபர் 26 இல் காலை 9 மணிக்குப் புவி பிறந்தது என்றார். இதற்கு அவர் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டார். 17, 18 ஆம் நூற்றாண்டு புவி அமைப்பியல் ஆராய்ச்சியில் மையக் கருத்தாக இருந்தது எது? - நிலத்தோற்றங்களும் தொல்படிவங்களும் ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ளவை. இவ்விரு கருத்துகளைப் பற்றி முதன் முதலில் முறை யாகச் சிந்தித்தவர் யார்? 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர் நீல்ஸ் ஸ்டீன்சன், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு சிறந்த