பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. 39. 40. 41. 42. 45. 44. 45. 46. 47. 14 3. பழுப்பு - மலைகள் 4. மஞ்சள் - மேட்டு நிலங்கள் 5. வெள்ளை - பனிப் பகுதிகள் நாட்டுப்படச்சுவடி (அட்லஸ்) என்றால் என்ன? நிலத்தோற்ற இயல்புகளைப் பல நிலைகளில் காட்டும் படத் தொகுப்பு. புவிஇயலை அறிய இன்றியமையாதது. உலக உருண்டை என்றால் என்ன? புவியின் இயல்புகளைக் காட்டும் கோளம். புவி இயல் பயிற்றுவதில் இன்றியமையாக் கருவி. நாட்டுப்படங்கள் என்பவை யாவை? ஒரு நாட்டின் கண்டம், தீவு, மலை, அரசியல் பிரிவுகள் முதலியவற்றைக் காட்டும் படங்கள். புவி இயல் பயிற்றுவதில் இன்றியமையாதவை. திசைகள் எத்தனை? கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வடமேற்கு தென்மேற்கு வடகிழக்கு தென்கிழக்கு. நிலப்படத்தின் பயன் யாது? திசைகளை அறிவதன் மூலம் ஒர் இடத்தின் அமை விடத்தை அறியலாம். ஒரு நிலப்படத்தின் அளவு 1 செ.மீ.-100கி.மீ. எனக் குறிக்கப்பட்டிருந்தால் என்ன பொருள்? நிலப்படத்தின் மீது 1 செ.மீ. தொலைவு புவியின் மீது 100கி.மீ.க்கு ஒப்பாகும். மழையளவுமானி என்றால் என்ன? குறிப்பிட்ட இடத்தில் மழை வீழ்ச்சியைப் பதிவு செய்யுங் கருவி. பாரவரைவி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட காலத்தில் காற்றுவெளி அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாளில் பதிவு செய்யும் கருவி. பாரமானி என்றால் என்ன? காற்றழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி. வெப்பநிலைமானி என்றால் என்ன? வெப்பநிலையை அளக்கப்பயன்படும் கருவி. செல்சியஸ்