பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26, 27. 28. 29. 30. 51. 32. 19 மரியான அகழி புவியின் மூன்று மண்டலங்கள் யாவை? 1. கற்கோளம் 2. நீர்க்கோளம் 3. காற்றுவெளி. புவி ஒட்டிற்குரிய விசைகள் எவற்றால் உண்டாகின்றன? புவிக்கு அடியில் உண்டாகும் வேதிமாற்றங்கள், கதிரியக்கம் ஆகியவற்றால் உண்டாகின்றன. வெப்ப அடிப்படையில் புவி பிரிக்கப்பட்டிருக்கும் மண்டலங்கள் யாவை? . 1. வெப்ப மண்டலம் 2. சீரான வெப்ப மண்டலம் 3. குளிர் மண்டலம். புவியின் இரண்டு இயக்கங்கள் யாவை? 1. சுற்றுதல் - புவி தன்னைத்தானே ஒரு சுற்று சுற்ற 24 மணி நேரம் ஆகிறது. 2. சுழலுதல் - கதிரவனைப் புவி ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. இவ்விரு இயக்கங்களும் ஏனயை எட்டுக் கோள்களுக்கும் உண்டு. சமன விசைகள் என்றால் என்ன? இவை தங்களுக்கு வேண்டிய ஆற்றலைக் கதிரவனிட மிருந்து பெறுகின்றன. எ-டு காற்று, நீர், நகரும் பனி. புவி சுழல்வதால், அதிலிருந்து நாம் வான்வெளியில் தூக்கி எறியப்படாமல் இருக்கிறோம். ஏன்? ஒவ்வொரு பொருளும் மற்றொன்றை ஈர்த்த வண்ணம் உள்ளது. இந்த ஈர்ப்பின் காரணமாகவே நாம் புவியில் வாழ முடிகிறது. புவியின் ஈர்ப்பு அதன் மையத்தை நோக்கி அதிகம். ஆகவே, ஈர்ப்பு குறைவாக உள்ள பொருள்கள் எல்லாம் புவியின் மையம் நோக்கி விழுகின்றன. தூக்கி எறியும் கல் கீழே விழ இதுவே காரணம். கதிரவன் ஒன்பது கோள்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது எவ்வாறு? ஒன்பது கோள்களைக் காட்டிலும் அதன் ஈர்ப்பு அதிகம். ஆகவே, அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிகிறது.