பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48

பொருள். அயோடின், கார்பாலிக் அமிலம், அக்ரோஃப்ளேவின் முதலியவை நோய் நுண்மத் தடைப் பொருள்கள் ஆகும்

antisiphon : (கம்) உந்து தடுப்பு வடிகுழாய் : ஒருவகை நீர்காப்புப் பொறியமைப்பு. இதில் முத்திரையை உடைக்கக்கூடிய வடிகுழாய் இயக்கத்தைத் தடுப்பதற்குப் போதிய கனஅளவு திரவத்தை உள்ளடக்குவதற்கான வடிகாலின் விட்டம் அதிகரிக்கப்படுகிறது

antitoxin : (நோயி..) எதிர் நச்சு : உடலில் பாக்டீரியாவினால் உண்டாகும் நச்சுப் பொருளுடன் கலந்து அதனைத் தீங்கற்றதாக்கு வதற்கு உடல் உற்பத்தி செய்யும் பொருள்

antrum : (உட.) தாடைக் குழிவு: மேல் தாடை உள் வளைவு. இது பற்களுக்கு மேலே நெற்றிக்குள்ளே கண்களுக்குச் சற்று மேலே காதின் பின்புறமுள்ள எலும்பில் அமைந்திருக்கும்

anvil : (உலோ.) பட்டடைக்கல்/அடைகல்; ஓர் எஃகு அல்லது இரும்புப்பாளம் இதன் மீது உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல் நடைபெறுகிறது

anvil block: (உலோ) பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம் : ஒரு மிகப் பெரிய வார்ப்பிரும்புப் பாளம். இது நீராவிப் பட்டடைக் கல், மற்றக் கனமான சம்மட்டிகள் ஆகியவற்றுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும்.இது அடிப்பதால் உண்டாகும் அதிர்வினைத் தாங்கிக் கொள்ளும். இது பெரும்பாலும் காரை அல்லது கான்கிரீட்டில் பதிக்கப் பெற்றிருக்கும்

anvil vise : பட்டடைக்கல் குறடு : நிலையான கிடுக்கியின் மீது ஒரு பட்டடைக் கல்லினைக் கொண்ட ஒரு குறடு

aorta: ( உட. ) பெருந்தமனி :இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாய்

aperture: (இயற்.) ஒளிபுகு இடைவெளி : 1) ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம். 1/6 ஒளிபுகு இடைவெளி கொண்ட ஆடியுள்ள ஒளிப்படக் கருவியின் ஆடியின் விட்டம் அதன் குவி மையத் தூரத்தின் 1/6பகுதியாகும் (2) கட்டிடத்தில், ஒரு சுவரில் கதவுக்காக அல்லது சன்னலுக்காக விடப்படும் இடைவெளி

aperture mask: (மின்,) இடையிட மூடி: ஒரு மூவண்ணப் படக் குழாயின் பார்வைத் திரைக்கு நேராகப் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள துளையிட்ட ஒரு மெல்லிய தகடு

apex: (கணி.) மேல் நுனி / மேல்: