பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பல்லவர் வரலாறு



கல் தொலைவில் உள்ள கடிகசாலம் எனப்படும் சோழசிங்கபுரமே ஆகும். இதனைக் ‘கடிகை’ என்றே திருமங்கையாழ்வார் குறித்துள்ளார். வடமொழிச் சொல்லான ‘சீதா’ என்பது தமிழில் ‘சீதை’ என வருதல் போலக் ‘கடிகா’ என்னும் வடசொல் தமிழில் ‘கடிகை’ எனப்பட்டது. வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள திருவல்லம் கல்வெட்டு ஒன்று (இரண்டாம் நந்திவர்மன் காலத்தது) இந்த இடத்தில் (கடிகாசலத்தில்) இருந்த கடிகையையே குறித்தலைக் காணலாம். இங்குச் சிறந்த பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு வைணவர்கென்று ஒரு கல்லூரி (கடிகா) இருந்திருத்தல் இயல்பே. இக் கடிகாவை இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்தான் என்பது தெரிகிறது.[1] இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் ‘கடிகா’ என்றது கடிகாசலத்தைக் குறித்ததெனின், இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் காலத்து வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ என்ற சொல் கடிகாசலத்தையே குறித்ததாதல் வேண்டுமென்றோ?

முடிவு

கி.மு. 350 முதல் 400க்குள் உண்டான இச் செயல்கள் (இரண்டாம் கந்தவர்மன் கடிகாவைக் கைப்பற்றியதும் குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பறியதும்) கதம்பர் கல்வெட்டு களிற் காணப்படா மையாலும், வேறு எந்தக் கல்வெட்டுகளிலும் நூல்களிலும் காணப் படாமையாலும், இக் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் வாகாடரை விரட்டநடந்தனவாகக் கோடலே பொருத்தமாகும்.

வாகாடகர்பால் நாட்டை இழந்த பல்லவன் (வீரகூர்ச்சவர்மன்?) சூட்டு நாகருடன் உறவு கொண்டான். ‘பெண்ணையும் அரச நிலையையும் அடைந்தான் அவனால் வளர்க்கப்பெற்ற இரண்டாம் கந்தவர்மன் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விழைந்தான்; கடிகாசலம் வரை இருந்த தொண்டைநாட்டுப் பகுதியையே கைப்பற்ற முடிந்தது. அவற்றிற்குப்பின் அவன் மக்கள் மூவருள் ஒருவானன குமாரவிஷ்ணு மேலும் முயன்று காஞ்சியைக் கைப்பற்றி


  1. D.C. Minakshi’s “Ad, and S. Life under the Pallavas pp. 197-199.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/84&oldid=583609" இலிருந்து மீள்விக்கப்பட்டது