பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பல்லவர் வரலாறு



அவர்கள் நந்தி வழிபாட்டினர். (சாலங்காயன நந்தி). அவருள் இரண்டாம் அரசனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திரகுப்தனை எதிர்த்த அரசர் பலருள் ஒருவன் ஆவன். இறுதியில் இந்நாடு சாளுக்கியர் கைப்பட்டது.

இக்குவாகர்-பிருகத்பலாயனர்

கிருஷ்ணை, குண்டுர்க்கோட்டங்களை இக்குவாகர் (இக்ஷவாகர்) என்பவர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டனர். இவருள் ஒருவனான சாந்தமூலன் என்பவன் கி.பி. 225இல் தன்ஆட்சி நிறுவி அந்நாட்டைஆண்டான். இவன் மரபினர் சில ஆண்டுகளே அதனை ஆண்டனர். பிறகு அதனைப் பிருகத் பலாயனர் ஆண்டினர்; இறுதியில் அப் பகுதி ஏறத்தாழக் கி.பி. 275இல் பல்லவர் கைப்பட்டதாகலாம். அதன் தலைநகரம் ‘தான்யகடகம்’ என்பது.[1] இந்நகரம் பல்லவர் வடபகுதிக்குத்தலைநகரமாகச் சிவஸ்கந்தவர்மன் பட்டயத்தில் காணப்படுகிறது.[2]

ஆனந்தர்

குண்டுர், கிருஷ்ணைக் கோட்டங்களை இக்குவாகரிடமிருந்து ஆனந்தர் என்பவர் கைப்பற்றிக் கி.பி. 350 முதல் 450 வரை ஆண்டுவந்தனர். அப் பகுதி இறுதியிற் சாலங்காயனர் கைப்பட்டது.[3]

சூட்டு நாகர்

சாதவாகனப் பெருநாட்டின் தென்மேற்குப் பகுதி சூட்டு நாகர் என்பவர் ஆட்சியில் இருந்தது. அதனை ஆண்ட மாகாணத் தலைவருட் சிறந்தவனே கந்தநாதன் என்பவன். இம் மரபினர் சாதவாகனருடன் உறவு கொண்டிருந்தனர். இவர் தலைநகரம்


  1. Ibid, pp.163-165
  2. Dr. K. Gopalacharl’s “Early History of the Andhra country,’ pp.151-159
  3. D. Sircar’s Successors of the Satavahans,’ pp.56, 52
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/52&oldid=583580" இலிருந்து மீள்விக்கப்பட்டது