பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பல்லவர் வரலாறு



நோக்க-அவனுக்குப் பின் வந்தவருள் ஒருவனான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில், சாளுக்கிய-இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்தான்[1] என்பதை நோக்க-இரண்டாம் கந்தவர்மனுக்கு முன்னும் இரண்டாம் குமார விஷ்ணுவுக்கு முன்னும் (சில ஆண்டுகளேனும்) காஞ்சிமாநகரம் பல்லவர் வசமின்றிப் பகைவர் ஆட்சியில் இருந்திருநத்தல் வேண்டும் என்பது நன்கு தெளிவாதல் கூடும்.

“ஏறக்குறைய கி.பி. 350 இல் வடக்கே சமுத்திரகுப்தன் படையெடுப்பால் அல்லது கதம்பர் துன்பத்தால் காஞ்சியைச் சுற்றியுள்ள தம் நாட்டைவிட்டுப் பல்லவர் ஆந்திர நாட்டிற்கு விரட்டப்பட்டருக்கலாம். குமார விஷ்ணு என்னும் பல்லவ அரசன் (காஞ்சியை மீட்டவன்) வரை ஒன்பதின்மர் ‘பல்லவப் பேரரசர்’ என்றும் அறப் பேரரசர் என்றும் கூறப்பட்டுள்ளார்.” என்று சிறந்த ஆராய்ச்சி அறிஞரான கிருஷ்ன சாத்திரியார் கூறுதல் காண்க.[2]

சாதவாகனப் பேரரசின் தென்மேற்குப் பகுதியை ஆண்டிருந்த ‘சூட்டு நாகர் மகளை முதலாம் கந்தர்வர்மன் மகனான வீரவர்மன் மணந்தான் அம்மணவன்மையால் நாட்டைப் பெற்றான்’[3] என்று பல்லவர் பட்டயம் ஒன்று கூறலாலும், அவன் மகனான இரண்டாம் கந்தர்வர் மனது ஓங்கோட்டுப் பட்டயம், ‘வீரவர்மன் பல போர்களில் வெற்றி கண்டான்’ என்று கூறலாலும், அக் காலத்தில் (கி.பி. 375-400) காஞ்சியும் அதனைச் சார்ந்த நாடும் வாகாடகர் மேற்பார்வையில் இருந்ததாலும் (?) சூட்டுநாகர் துணையைக் கொண்டு வாகாடகரை எதிர்த்து ஓரளவு நிலப்பகுதியைக் கைக்கொண்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. இந்த வீரர்கள் சூட்டுநாகர் மகளை மணந்ததால் அவர் தம் நாட்டைப் (அவர்க்கு ஆண் மகவு இன்மையால்) பெற்றான் எனக் கோடலிலும்


  1. R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.124.
  2. Ep. indica, Vol. 15, No.11, p.249. C.V.N. Iyer’s Saivism in S. India, pp. 295, 296.
  3. D. Sircar’s Successors of the Satavahanas, p.223.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/86&oldid=583611" இலிருந்து மீள்விக்கப்பட்டது