பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் யாவர்?

33



வனவாசி என்பது. இவர் ஆட்சி கி.பி.340 இல் கதம்பரால் பறிக்கப்பட்டு விட்டது.

பல்லவர்

சாதவாகனப் பேரரசில் கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற் பட்ட நிலப்பகுதியே பல்லவர் ஆட்சியில் இருந்தது. பல்லவா மரபினர் சாதவாகனர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டு வந்தவர்; தம் பேரரசு வலி குன்றத் தொடங்கிய 225 இல் தாம் ஆண்ட நாட்டைத் தமக்கே உரிமை செய்துகொண்டு விட்டனர்; பின்னர் வலுப் பெற்றதும், தொண்டைநாட்டைக் கைப்பற்ற முனைந்தனர்.

இங்ஙனம் சாதவாகனர் பேரரசில் மாகாணத் தலைவராக இருந்த சாலங்காயனர். விஷ்ணுகுண்டர், இக்குவாகர், பிருகத் பலாயனர், சூட்டுநாகர், பல்லவர் என்பவர். அப்பேரரசு வலிகுன்றத் தொடங்கியதும், தாம்தாம் ஆண்டுவந்த மாகாணத்திற்குத்தாமே அரசராகிவிட்டனர்.[1]

இதனாற்றான், (சாதவாகனப் பேரரசு சத்ரபர், வாகாடகர் என்ற புதிய மரபினர் படையெடுப்பால்நிலைதளர்ந்தபோது தம் ஆட்சியை உண்டாக்கிக் கொண்ட) இந்த அரசருள் பலர், கி.பி.340 இல் தெற்கு நோக்கிப் படையெடுத்த சமுத்திர குப்தனை எதிர்த்தனர் என்பதை அல்லகாபாத்துண்கல்வெட்டு உணர்த்துகிறது. சாதவாகனப் பேரரசு உடைபட்டுச் சிறிய பல நாடுகள் தோன்றியிராவிடின், சமுத்திர குப்தனை இத்துணை அரசர் (இவருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன்) கோதாவரி, கிருஷ்ணை ஆறுகளண்டை எதிர்த்திருத்தல் இயலாதன்றோ?

பல்லவரும் தொண்டை நாடும்

இந்நிலைமை உண்டாதற்கு முன்னரே, இந்தப் பல்லவ மரபினர் (மாகாணத்தலைவர்) தங்கள் தென் எல்லைப்புறம்போர்களிற் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வந்தனர்.


  1. Ibid.Iap pp.3-4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/53&oldid=516908" இலிருந்து மீள்விக்கப்பட்டது