பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக்காலப் பல்லவர்

57



காலம் கி.பி. (575-615)

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களை நன்கு ஆராய்ந்த அறிஞர் கீழ்வருமாறு அரசமுறை வகுத்துளர்.

குமார விஷ்ணு I
கந்தவர்மன் I
வீரகூர்ச்சவர்மன்
கந்தவர்மன் II
(இவன் பிள்ளைகள் மூவர்)
சிம்மவர்மன் இளவரசன்
விஷ்ணுகோபன்
குமாரவிஷ்ணு III
கந்தவர்மன் II
நந்திவர்மன்
சிம்மவர்மன் II
விஷ்ணுகோபவர்மன்
புத்தவர்மன்
குமாரவிஷ்ணு III
சிம்மவிஷ்ணு

(1) களடர்த்திரி என்பவனைக் ‘குடும்பத் தலைமணி’ என்றும், ‘இலக்குமி கணவன்’ என்றும் பட்டயங்கள் குறித்தலால், கிருஷ்ண சாஸ்திரியார் கருத்துப்படி இவனுக்குக் ‘குமாரவிஷ்ணு’ என்னும் பெயர் இருந்தது என்று கோடலில் தவறில்லை. மேலும் இவனே சமுத்திரகுப்தனை எதிர்த்த விஷ்ணுகோபனாக இருக்கலாம்; ‘இருத்தல் இயலாது’ என்று மறுக்கக் காரணம் ஒன்றும் இல்லை. முற்காலப் பல்லவருள் கடைசி அரசன் புத்தியங்குரன். இடைக்காலப் பல்லவருள் தலைமணி போன்றவன் களபர்த்திரி அல்லது குமார விஷ்ணு. இவ்விருவருக்கும் இடையில் வேறு அரசர் ஆள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/77&oldid=583602" இலிருந்து மீள்விக்கப்பட்டது