பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நரசிம்மவர்மன்

111



அடைக்கலம் புகுந்தான். இருவரும் மனம் ஒத்த நண்பர் ஆயினர். மானவன்மன் காஞ்சியில் இருக்கையில், புலிகேசி காஞ்சிமீது படையெடுத்தான். உடனே நரசிம்மவர்மன் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போர்க்களம் சென்றான் ஆயினும், தன்னைக் காத்துவரும் பேரரசன் தனியே போர்க்களம் சென்று போர்புரிதலைக் காணப்பெறாத மானவன்மன். பெரும்படையுட்ன் சென்று நரசிம்மனோடு சேர்ந்து புலிகேசியைத் தாக்கினாள்; அவனைத் தோற்கடிப்பதில் பல்லவனுக்குப் பேருதவி புரிந்தான்.”[1]

சாளுக்கியன் ஒட்டம்

“புலிகேசியின் முதுகாகிய தகட்டில் நரசிம்மவர்மன் வெற்றி என்பதைப் பொறித்தான்.’ என்று கூரம் பட்டயங்கள் கூறுதல் கவனிக்கத்தக்கது. “பல்லவர் படைக்கு முன் நிற்க முடியாமல் புலிகேசி முதுகு காட்டி ஓடினான்” என்பதே இதன் பொருள். முதற்போர் பரியலம் என்னும் இடத்தில் நடந்தது. புலிகேசி பின்வாங்கினான்; பிறகு இரண்டாம் போர் மணிமங்கலம் என்னும் இடத்தில் நடந்தது; புலிகேசி மேலும் பின்வாங்கினான் இறுதிப் போர் சூரமாரத்தில் நடந்தது; பின் சாளுக்கியன் ஆற்றானாய் ஒடலானான். பல்லவன் அவனை விடாது துரத்திச் சென்றான். அப்போது வழியில் பல இடங்களில் சிறு போர்கள் நடந்தன: பின்னர்ச் சாளுக்கியன் திரும்பிப்பாராது ஓடியதால் பல்லவர்சேனை அவன் படையைத்துரத்திச்சென்றே, சாளுக்கியவன் தலைநகரமான வாதாபியுள் நுழைந்து விட்டது.

வாதாபி கொண்டது

வாதாபி நகரம் நரசிம்மவர்மன் கைப்பட்டது. வாதாபி என்னும் நகரத்தை அழித்த காரணம் பற்றியே நரசிம்மவர்மன் ‘வாதாபி என்னும் அசுரனை அழித்த அகத்தியர் போன்றவன்’ என்று கூறப்பட்டான். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன் அவனது


  1. Mahavamsa, Part II, p.35 (Colombo, 1909)


9