பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

105


கலைக்கூடமாக விளங்குகிறது. இதன் விளக்கம் “இசையும் நடனமும்,” “ஒவியமும் சிற்பமும்” என்னும் பகுதிகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக் காண்க.

நடனத்தில் விருப்புடையவர் இசையில் விருப்புடையராகவே இருப்பர் என்பது உறுதி. ஆதலின், மகேந்திரவர்மன் இசைநுட்பம் உணர்ந்தவனாதல் வேண்டும். இதற்குத் தக்க சான்று புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்த குடுமியா மலையில் உள்ள கல்வெட்டே ஆகும். ‘இந்தக் கல்வெட்டு இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்த உருத்திராச்சாரியார் என்பவர் மாணவனான அரசன் கட்டளைப்படி வெட்டப்பட்டது.’ என்பதே அக் கல்வெட்டின், சாரம், மாமண்டூரில் உள்ள ஒரு கல்வெட்டில் உள்ள புகழ்ச்சி மொழிகளையும் அதில் சுரம் (ஸ்வரம்) வர்ணம் இவற்றை வகுத்த வான்மீகியாரைப் பற்றிக் காணப்படும் குறிப்பையும், மத்தவிலாசப் பிரகசனம் பற்றிய குறிப்பையும், குடுமியாமலைக் கல்வெட்டிற்கும் திருச்சிராப்பள்ளியில் உள்ள குகைக் கோவில் கல்வெட்டிற்கும் உள்ள ஒருமைப்பாட்டையும் கண்டு வியந்த ஆராய்ச்சியாளர், ‘குடுமியாமலைக் கல்வெட்டு மகேந்திரன் கட்டளையாற்றான் வெட்டப்பட்டது. அவன் இசையில் வல்லவனாக இருத்தல் வேண்டும்’ என்று அழுத்தமாகக்[1] கருதுகின்றனர்.

மகேந்திரன்-நாலாசிரியன்

மாமண்டூர்க் கல்வெட்டில் குறிக்கப்பட்ட மத்தவிலாசப் பிரகசனம்[2] என்னும் நூல் சில ஆண்டுகட்கு முன்னரே திருவிதாங்கோட்டில்[3] வெளிடப்பட்டது. இந்நூல் வடமொழியில் வரையப்பட்டது. மகேந்திரவர்மன் வடமொழிப் புலவன் என்பதை


  1. Prof. J. “Durbrueil's, “Pallavas.’ p.23, இசையைப் பற்றிப் பிற்பகுதியிற் காண்க
  2. இதன்தமிழ் மொழிபெயர்ப்பைச் ‘செந்தமிழ்ச்செல்வி'யிற் காண்க.
  3. திருவிதாங்கோடு என்பதே பழைய பெயர்.