பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

பல்லவர் வரலாறு



இதுகாறும் கூறியவற்றால், பல்லவர் ஆட்சியில் இருந்த மக்கள் பொதுக் கல்வி அறிவும், சமயக் கல்வி அறிவும், பிற கலைகளில் அறிவும் பண்படப்பெற்றிருந்தனர் என்பதைப் பாங்குறஉணரலாம்.[1]


20. சமயநிலை

சமண வீழ்ச்சிக்குக்காரணம்

இடைக்காலப் பல்லவர் காலத்தில் தமிழகம் நுழைந்த திகம்பர சமணத் துறவிமார் ஆடையின்றிக் திரிந்தமை, நீராடாது அழுக்குப் படிந்த மேனியராய் அலைந்தமை, இயற்கைக்கு மாறுபட்ட முறையில் தனித்துத் துறவு நிலையில் முற்ற இருந்தமை, கடுமையான நோன்புகள் நோற்றமை, சமயத்தின் பெயரால் தற்கொலை செய்து கொண்டமை இன்ன பிறவும் தமிழர் முன் இந்நாட்டிற்காணாத காட்சிகள் அல்லவா? இவை அனைத்தும் தமிழர் மரபுக்கே மாறுபட்டவை. பல்லவர் காலத் தமிழ் மக்கள் அகம் - புறம் கண்ட சங்கத் தமிழர் மரபினர்: சைவ-வைணவ வழிபாடு கொண்ட மரபினர். இயற்கையின் ஒரு கூறாகிய பெண்ணை (தாய்மையை)க் கடியத் தலைப்பட்ட சமணத்துறவிமாரை அத்தமிழ்மக்கள் எங்ஙனம் நேசித்தல் கூடும்? முதலிற் சமண முனிவருடைய கல்வி கேள்விகளிலும் பிற நற்பணிகளிலும் உவந்து சமணரான மக்கள், இம் மாறுபாடுகளை உணர்ந்த பின்னர் உள்ளுர வெறுத்தது வந்தனர்; அப்பர் துணிந்து வெளிப்பட்டவுடன் சிலர் வெளிப்போந்தனர்; அரசனே மாறியவுடன் தொண்டை நாடே சமயம் மாறியதென்னலாம். இந்நிலைமையே பாண்டிநாட்டிலும் இருந்து, சம்பந்தரால் மாறியது.

உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது?

அப்பர்க்கு முன்னரே நாயன்மார் பலர் சமணரைப் பின் பற்றி, மக்களைத் தம்வழித் திருப்பத் தண்ணிப் பந்தர் வைத்தல், மடங்கள்


  1. தமிழ்க் கல்வி விளக்கம் ‘இலக்கியம்’ என்னும் தலைப்பில் விவரமாகத் தரப்படும்.