பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது

197



பல்லவன் -தமிழரசர்

தந்திவர்மன் காலத்தில் (கி.பி.775-825) மதுரையை ஆண்ட முதலாம் வரகுண பாண்டியன் (கி.பி.765-815) பல்லவர்க்கு உட்பட்டிருந்த சோழ நாட்டைக் கைப்பற்றித் தொண்டைநாட்டையும் பெண்ணையாறுவரை கவர்ந்தான் என்பதை முற்பகுதியில் குறித்தோம் அல்லவா? அவன்பெண்ணையாற்றங்கரையில் இருந்த காலம் ஏறத்தாழக் கி.பி. 780ஆகும். அதுமுதல் தெள்ளாற்றுப் போர்வரை சோழ நாடும் தொண்டை நாட்டின் தென்பாதியும் பாண்டியர் வசமே இருந்தது என்னலாம். வரகுணன் இறந்த பிறகு, சீமாறன் சீவல்லபன் என்னும் அவன் மகன் பட்டம்பெற்று (கி.பி. 830-862) ஆண்டான்.[1] அவன் காலத்திற்றான் நந்திவர்மன் ஆகிய கழற்சிங்கன் (கி.பி. 825-850) பல்லவ அரசனாக இருந்தான். இவன் (கி.பி.830 அல்லது 832க்குள்) முன் சொன்ன வட புலப்போரை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள், பாண்டியன் மாறன். தனக்கு அடங்கிய சேர சோழருடனும் பெருஞ் சேனையுடனும் பெண்ணையாற்றைத் தாண்டி வட ஆர்க்காட்டுக் கோட்டத்திற்குள் நுழைந்தனன். உடனே நந்திவர்மன். வடக்கே வெற்றிபெற்ற தன் பெருஞ் சேனையுடன் மீண்டு. பகைவரைத் தெள்ளாற்றில் (வந்தவாசிக் கூற்றத்தில் உள்ளது) எதிர்த்துப் பெரும்போர் நிகழ்த்தி முற்றிலும் முறியடித்தான். இப்போர் ஏறக்குறையக் கி.பி. 832இல் நடந்திருத்தல் வேண்டும். இப்போர் மிகவும் கொடுமையானது.

நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்று ஓடிய பகைவரைவிட்டிலன். இவன் அவர்களைத் துரத்திச் சென்று கட்ம்பூர் (செ.25), வெறியலூர் (27). வெள்ளாறு (19.22, 61), பழையாறு(31) என்னும் இடங்களில் தோற்றகடித்துப் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்தவன். பாண்டியன் முதலிய பகைவர், எல்லைப்புறத்தில் இருந்த குறும்பில்


  1. தெள்ளாற்றுப் போர் வரகுணன் காலத்து என்று திரு துப்ராய் அவர்கள் கூறல் பொருந்துவதன்று. wide his “Pallavas’ pp.79-80. ஸ்ரீமாதன் காலத்தில் நடந்ததே எனத் திருநீலகண்ட சாத்திரியார் கூறலேஏற்புடையது. Vide his “Pandian Kingdom’. p.73. Foot-note.