பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

பல்லவர் வரலாறு



கொடும்பாளுர்க் கல்வெட்டு ஒன்றில் விக்கிரமகேசரி என்பவனுக்குப் பாட்டன், வாதாபி கொண்டவன் என்று கூறப்பட்டுள்ளான். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இப்படி ஒருவன் இருந்திருத்தல் முடியாது என்று பலர் கருதினர். அந்தச் சிற்றரசன் மூன்றாம் நந்திவர்மன் காலத்துச் சிற்றரசன்; ஆதலின், தன் பேரரசனுக்குத்துணையாக வடபுலம்சென்று ‘குருக்கோடு’ என்னும் இடத்தில் இரட்டர்க்கு அடங்கிய சாளுக்கியனை (சிற்றரசனை) வென்றிருக்கலாம்; அவ் வெற்றிக்காகத் தன்னை வாதாபி கொண்டவன் (வாதாபி-இங்குச் ‘சாளுக்கியர் தலைநகர்’ என்ற அளவில் பொருள் கொள்ள வேண்டும்) என்றும் கூறிக்கொண்டிருக்கலாம்; இன்றேல், இராட்டிரகூடர் தோற்ற பிறகு வாதாபி மீதே அவன் படையெடுத்திருக்கலாம். அவன் பரதுர்க்க மர்த்தனன் (பகைவர் கோட்டையை அழித்தவன்) எனப் பெயர் கொண்டவன். இவற்றை எல்லாம் நன்கு ஆர்ாயின் மூன்றாம் நந்திவர்மனான கழற்சிங்கன் முதலில் இராட்டிரகூடரைத் தோற்கடித்துத் தான் பேரசசன் என்பதை நிலைநிறுத்தினான் என்பது தெரியலாம். இவனது வடபுல வெற்றியை வேலூர் பாளையப் பட்டயமும் குறிப்பாக உணர்த்துதல் காண்க.

“படைக்கலப் பயிற்சியிற் பண்பட்ட நந்திவர்மன். பிறரால் பெறுதற்கரிய பல்லவப் பெருநாட்டின் செழிப்பைப் பெற்றான். அவன் அதற்காகப் போர்க்களத்தில் தன் பகைவரைக் கொன்றான். அவனது வாளால் துணிக்கப்பட்ட யானைகள் அணிந்திருந்த முத்து மாலைகள் போர்க்களத்தில் சிதறிக் கிடந்த காட்சி:போர்க்களமங்கை தன் பற்களைக் காட்டி நகைப்பது போல இருந்தது.[1]

இப் பட்டயம் நந்திவர்மனது தெள்ளாற்றுப் போருக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது இங்கு நினைக்கத்தக்கது. ஆகவே இங்குக் குறித்த போர்மேற்சொன்ன பல்லவர் - இரட்டர் போரே


  1. S.I.I. Vol.II. No.98: போர் இவ்வளவு கடுமையாக நடந்ததாற் போலும் அமோகவர்ஷன், தெற்கே படையெடுத்துச் சென்றதன் சிற்றரசன் பங்கயனை உடனே வருமாறு கட்டளை போக்கினான்.