பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று ஐயங்கள்

329



முதலியன. மடம், மண்டபம் முதலியவற்றை உடைய தெருக்கள்-மடத்துத் தெரு, மண்டபத் தெரு, மூன்றாம் திருவிழா மண்டபத் தெரு எனப்பட்டன. கோவில்கள் உள்ள தெருக்கள் அக் கோவிற் பெயர் கொண்டு விளங்கின. அவை மதங்கீசர் தெரு, திருமேற்றளி ஈசர் தெரு முதலியன. இப் பெயர்கள் பல்லவர் காலத்தில் இருந்தன என்று கோடலில் எவ்விதத் தவறும் இருப்பதாகக் தெரியவில்லை. வடக்கு வாசல் தெரு என்றொரு தெரு இன்றும் இருக்கின்றது. இவ் வாசல் பண்டைக் கோட்டை வாசலாக இருந்திருக்கலாம்.[1]

காஞ்சியை அடுத்துக் காஞ்சி வாயில் என்னும் பெயருடன் சில சிற்றுார்கள் இருந்தன என்பது இங்குநினைவிற் கொள்ளுதல் நலம்.[2] ‘சாலாபோகம் தெரு’ என்பது ஒன்று. சாலா போகம் என்பது கோவில் வயல்களைக் குறிப்பதாகும். அயற்றை அடுத்துள்ள தெரு இங்ஙனம் அழைப்புண்டமை கருதத்தக்கது.

பல்லவ மேடு

இஃது இன்று ‘பாலி மேடு’ எனக் கூறப்படுகிறது. இந்த இடம் பெரிய காஞ்சிக்கும் சிறிய காஞ்சிக்கும் இடையில் தக்க இடத்தில் அமைந்திருத்தலே - இது பண்டைக் காலத்தில் பல்லவர் அரண்மனை இருந்த இடமாதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இம்மேடு காஞ்சிநகரமட்டத்திற்குமேல் ஏறத்தாழ 30 அடி உயரம் உடையது. இதன்மீது நின்று நாற்புறமும் காணின், சுற்றிலும் பள்ளமான நிலப்பரப் புண்மையை உணரலாம். மேட்டின்மீது தென்னை மரங்கள் வளர்ந்துள்ளன. ஒருபால் சிறிய கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் உள்ள ஆவுடையார் செங்கல்லாலும் சுதையாலும் அமைந்தது. லிங்கம் கல்லால் இயன்றது. அக்கோவிலை அடுத்து இரண்டு கல் மண்டபங்கள்


  1. ‘ஏரி இரண்டும் சிறகா.... பொலிவு’ என வரும் தண்டியலங்கார வெண்பா இங்கு நினைக்கத்தக்கது.
  2. S.I.I. Vol. II, p.365.