பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

283



நாதாந்த நடனம்

சிவபெருமானுக்கே உரிய பழைய நாதாந்த நடனம்பல்லவர் காலத்துக் கோவில்களில் இல்லை. ஆயின் அதனினும் சிறிது வேறுபட்டதும் அரியதுமாகிய புதிய நடனம் கயிலாசநாதர் கோவிற் சுவர்களிற் காணக்கிடக்கின்றது."இது, நாட்டிய நூலில் உள்ள 108 வகை நடனங்களில் சேராதது. இதில் சிவபெருமான் தன் நடனத்திடையில் திடீரென்று ஆலிதாசன நடனத்தை ஒத்த ஒரு நிலையை அடைகின்றதாகக் தெரிகிறது.[1]

‘தாக்கிய திருவடி’ நடனம்

நடிகன் வலக்காலையும் வலக்கையையும் வளைக்க வேண்டும், இடக்காலும் இடக்கையும் வலமாகத் தூக்க வேண்டும்.

இந்த நிலையில் நடித்தலே ‘தூக்கிய திருவடி (குஞ்சிதபாத) நடனம் எனப்படும். இதனையும் கயிலாசநாதர் கோவிற் சிற்பங்களிற் காணலாம். இங்குச் சிவன் எட்டுக் கைகளை உடையவன். மேல் வலக்கைப் பாம்பின் வாலைப்பற்றியுள்ளது. அடுத்தகையில் தமருகம் உள்ளது. மூன்றாம் கைவளைந்து, அங்கை மெய்ப்பாடு காட்டுவதாக உள்ளது; நான்காம் கை ‘அஞ்சித்’ நிலையில் இருக்கின்றது. மேல் இடக்கை ‘மழு’ ஏந்தியுள்ளது. அடுத்தகை ‘கொடிக்கை’ நிலையில் உள்ளது; அடுத்தது ‘முக்கொடி’ (திரிபதாக) நிலையில் உள்ளது: நான்காம் இடக்கைமேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் உள்ளங்கை சடைமுடியைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது; இச் சிவனுக்குக் கீழே மூன்று கணங்கள் நடிக்கின்றனர். இடப்புறம் உமையான் அமர்ந்துள்ளான். அடியில் விடை காணப்படுகிறது. வலப்புறம் நடனச் சிலை ஒன்றும் அதன் அடியில் இரண்டு கணங்கள் குழல் வாசிப்பதாகவும் சிற்பங்கள் காண்ப்படுகின்றன்.


  1. R. Gopinatha Rao’s “Hindu Iconography, Vol II, Part I, p. 269. ‘அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாதோர் கூத்து’ என்னும் அப்பர் கூற்றுச் சிந்திக்கற்பாலது.