பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலப் பல்லவர்

77



இப் பட்டியல், இடைக்காலப் பல்லவர் பட்டிலைப் போல் குழப்பம் திருவதன்று; இன்னவருக்குப்பின் இன்னவர் பட்டம் பெற்றனர் என்பதை ஏறக்குறையத் தெளிவாகத் தெரிவிக்கிறது. பட்டியலைப் பார்ப்பின் சிம்மவிஷ்ணு காலுமுதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் ஒரே பரம்பரை அரசர் ஆண்டு வந்தமை தெளிவாகும். அந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பீமவர்மன் முதல் இரண்ய வர்மன் ஈறான ஐவரும் எந்நிலையில் இருந்தனர் என்பதை அறியக்கூடவில்லை. அவர்கள் மாகாணத் தலைவர்களாக அல்லது சேனைத் தலைவர்களாக இருந்திருக்கலாம். சிம்மவிஷ்ணுவுக்குத் தம்பியான பீமவர்மன் வழியில் வந்த இரண்டாம் நந்திவர்மன் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவப் பேரரசன் ஆனான். பின்னர் அவன் வழியினரே கி.பி. 900 வரை பல்லவ மன்னவராக இருந்து மறைந்தனர்.

மூன்றாம் சிம்மவர்மன்
சிம்ம விஷ்ணு பீமவர்மன்
மகேந்திரன் 1 புத்தவர்மன்
நரசிம்மர்வமன் 1 ஆதித்தவர்மன்
மகேந்திரவர்மன் 2 கோவிந்தவர்மன்
பரமேசுவர்மன் 1 இரண்யவர்மன்
நரசிம்மவர்மன் 2 நந்திவர்மன் 2
பரமேசுவர மகேந்திர
வர்மன்2 வர்மன் 3 தந்திவர்மன்
நந்திவர்மன் 3
நிருபதுங்கவர்மன்
அபராசிவர்மன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/97&oldid=574780" இலிருந்து மீள்விக்கப்பட்டது