பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பல்லவர் வரலாறு



வேண்டும்; அவன் ஜயசிம்மன் அல்லது இரணதீரன் ஆதல் வேண்டும். இங்ஙனம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சாளுக்கியர்-பல்லவர் போர்கள் சாளுக்கியர் பேரரசு ஒழிந்த கி.பி. 8 ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்து நடந்தன என்பது இங்கு அறியத்தகும்.

(2) இரணதீரன் மகன் முதலாம் புலிகேசி கி.பி. 550 முதல் 566 வரை அரசனாக இருந்தான். இவன் பல சிற்றரசரை வென்று அடிப்படுத்திக் கி.பி.560இல் ‘பரிவேள்வி’ செய்தவன். இவன் மகன் முதலாம் கீர்த்திவர்மன் (கி.பி. 566-598). இவனே கதம்பர் அரசைக் குலைத்துக் கதம்ப நாட்டைச் சாளுக்கியப் பெருநாட்டில் சேர்த்துக் கொண்டவன். இவ்விருவர் காலங்களிலும் சாளுக்கியர் - பல்லவர் போர்கள் நடந்தன.[1] இந்தக் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன் மூன்றாம் சிம்மவர்மன் ஆவன். இக் குறிப்புகளுடன், ‘மூன்றாம் சிம்மவர்மன் தன் பகைவரைப் போர்களில் வென்றான்’ என வரும் வேலூர் பாளையப் பட்டயக் குறிப்பை ஒப்பிட்டு உணர்க.

போர்களின் பட்டியல்

இதுகாறும் கூறப்பெற்ற பல போர்களையும் கீழ்வருமாறு முறைப்படுத்திக் கூறலாம்.

போர்
எண்
ஏறத்தாழப்
போர் நடந்த காலம்
கி. பி.
போரிட்ட பல்லவர் போரிட்ட
இருதிறந்தார்
1 340-350 குமார விஷ்ணு 1 பல்லவர் - குப்தர் போர் 1
2 345-360 குமார விஷ்ணு 1 (அ)
கந்தவர்மன் 1
பல்லவர் - கதம்பர் போர்
3 350-375 வீரகூர்ச்சவர்மன் பல்லவர் - வாகாடகர் போர் 1
4 400-436 கந்தவர்மன் 2 பல்லவர் - வாகாடகர் போர் 2
5 436-460 சிம்மவர்மன் 1 பல்லவர் - கதம்பர் போர் 2

  1. M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.38.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/92&oldid=583617" இலிருந்து மீள்விக்கப்பட்டது