பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில புராணக்கதைகள்

193



814இல் தனது ஆறாம் வயதில் அரசன் ஆனான். அவன் கி.பி.880 வரை அரசாண்டான்.

தந்திவர்மன் காலத்தில் இரட்ட அரசனான மூன்றாம் கோவிந்தன் காஞ்சியை இருமுறை கைப்பற்றிப் பல்லவனைத் திறை கட்டுமாறு பணித்து மீண்டான் என்பதை முன்னரே கவனித்தோம் அல்லவா? அந்தக் கப்பங்கட்டும் கொடுமையை ஒழிக்க நந்திவர்மன் விரும்பினான் போலும்! அதனால், அவன், தான் பட்டம பெற்றவுடன், பெண்ணை யாற்றங்கரை வரை பாண்டியன் தன் நாட்டைப் பிடித்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், வடக்கு நோக்கித்தன் படைகளைத் திருப்பினான். நடந்த போரைப் பற்றிய குறிப்புகள் நந்திக்கலம்பகத்தில் கூறப்பட்டுள்ளன.

“எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி-இனவேழம்
கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகிற் போகாப்பொழுது”.
“.... குருக்கோட்டை குறுகா மன்னர்
போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி....”
“கேளாதார்,
குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்
அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள்.”[1]

இக் குருக்கோட்டை என்பது பெல்லாரிக் கோட்டத்தில் துங்கபத்திரையாற்றங்கரையில் உள்ள குருகோடு[2] என்பதே ஆகும். அங்குள்ள மலைமீது அழகிய கோட்டையும் சாளுக்கியர் காலத்துக் கோவில்களும் பிறவும் அழிந்த நிலையில் இருக்கக் காணலாம்.[3]


  1. கலம்பகம், செ.2, 35, 44, 84
  2. Historical Inscriptions of S. India, p.84.
  3. Bellary Gazetteer, pp.231-235.