பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரமேசுவரவர்மன்

135



வீரருடன் வந்த விக்கிரமாதித்தன், தனியனாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடி ஒளிந்தான். இப்போரில் சண்டையிட்ட ரமேசுவரவர்மனது போர்ப்பரியின் பெயர் அரிவாரணம்; குதிரையின் பெயர் அதிசயம்.’[1]

சாளுக்கியர் - பாண்டியர் போர் (கி.பி. 674-675)

‘விக்கிரமாதித்தன் உறையூரில் தங்கிய பிறகு பாண்டிய நாட்டைத் தாக்கினான். பாண்டியன் நெடுமாறன் மகனான கோச்சடையன் அவனை எதிர்த்து மங்கலாபுரத்தில் முறியடித்தான் என்று வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர்.[2] இது தவறு. என்னை? கோச்சடையன் மங்கலாபுரத்தில் மகாரதரை[3] வென்றான் என்று பட்டயங்கள் பகர்கின்றனவே அன்றி வேறில்லை ஆதலின் என்க.

விக்கிரமாதித்தனை நெல்வேலியில் வென்றவன் நெடுமாறனே ஆவன் என்பதை, “வில்வேலிக் கடல்தானையை நெல்வேலிச் செருவென்றும்” எனவரும் வேள்விக்குடிச் செப்பேட்டு அடி, குறிப்பாக உணர்த்துகிறது. ‘வில்வேலி என்பவன் சாளுக்கியன் படைத்தலைவனாக இருக்கலாம். “வில்லவனை நெல்வேலியிற் புறங்கண்ட பராங்குசன் என்பது சின்னமனூர்ச் செப்பேட்டு அடி ‘வில்வேலி, வில்லவன்’ என்பன ‘வல்லபன், வல்லவன்’ என்பவற்றின் திரிபாகலாம். வல்லபன் என்பது சாளுக்கியர்க்கு இருந்த பொதுப் பெயர் ஆகும். தென்னாட்டில் அக்காலத்தில் ‘கடல் போன்ற தானை உடைய பேரரசர் வேறு இல்லை. பல்லவர் படை எனின், பட்டயங்கள் வெளிப்படையாகக் குறித்திருக்கும். விந்த மலைக்குத்தென்பால் அந்நாளில் இருந்த பேரரசுகள்-கடல் போன்ற தானை உடையவை இரண்டே யாகும். ஒன்று பல்லவ அரசு; மற்றொன்று சாளுக்கிய அரசு. அத்தகைய பெரும் படையையுடைய


  1. S.I.I. Vol.1, pp.153-154.
  2. PTS. Iyengars “Pallavas part II, pp.57-58.
  3. K.A.N. Sastry’s “Pandyan Kindom,’ p.55-56.