பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

147



துன்புற நேர்ந்தது. பல துளி பெருவெள்ளமாதல் போல எல்லாப் போர்களின் விளைவும் திரண்டு கொடிய வற்கடமாக மாறியது.

பல்லவர் - கங்கர் போர்

மேற்சொன்ன போருக்கு முன்னோ பின்னோ இராசசிம்மன் கங்கநாட்டின்மீது படையெடுத்தான். இப் படையெடுப்பு பூவிக்கிரம கங்கன் (கி.பி. 650-670) பல்லவர்க்கு இழைத்த இன்னலுக்கேற்ற பரிசாகும் என்று கூறப்படுகிறது. முதலாம் சிவமாறன் பல்லவனை வென்றதாகக் கங்கர் பட்டயம் கூறுகின்றது.[1] உண்மை உணரக்கூட வில்லை.

இங்ஙனம் வடக்கிலும் மேற்கிலும் பகைவர் இருந்து இடர் விளைத்துவந்தமையாற் போலும், இராசசிம்மன் கல்வெட்டுகள் எல்லாம் இராசசிம்மன் போர்ச் சிறப்பையும் வீரத்தையும் நாட்டைப் பகைவரிடமிருந்து காத்தமையையும் தன் பெருமை குன்றாது பேரரசனாகவே இருந்து வந்ததையும் பலபடப் பாராட்டிக் கூறலாயின.[2]

கொடிய பஞ்சம்

இப் பேரரசன் காலத்திற்குமுன் பல்லவர்க்கும் சாளுக்கியர்க்கும் ஓயாத போர்கள் நடைபெற்றன அல்லவா?

மகேந்திரன்-புலிகேசிப்போர், நரசிம்மவர்மன்-புலிகேசிப்போர் - விக்கிரமாதித்தன் போர் ஆகியவற்றால் பல்லவநாடு என்னபாடு பட்டிருக்கும் போதாக்குறைக்கு இவன் காலத்தில் பல்லவர் சாளுக்கியர் போர், பல்லவர்-கங்கர் போர் நடந்தன. இவற்றால் பல்லவர் மூலபண்டராம் வற்றியது; பொருள்நிலை முட்டுப்பாடு எய்தியது. அதன் பயனாக நாட்டில் பெரிய வற்கடம் தோன்றியது. அது தோன்றியகாலம் இராசசிம்மன் காலமாகும். ‘அரசனே காஞ்சியைத்


  1. MVK Rao’s “Gangas of Talaked,’ pp49-50.
  2. இதுகாறும் கூறியவற்றை ஆராய்ச்சி அறிஞர் நன்கு ஆராய்ந்து முடிவு காண்பாராக.