பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரமேசுவரவர்மன்

131



(2) இவனே வெளியிட்ட ‘கத்வல்’ பட்டயம் கூறுவது: “ஸ்ரீ வல்லபனாகிய விக்கிரமாதித்தன் நரசிம்மவர்மனது பெருமையை அழித்தான், மகேந்திரன் செல்வாக்கை அழித்தான், ஈசுவர போத்தரசனை (பரமேசுவரவர்மனை) வென்றான். இவன் மகாமல்லன் மரபை அழித்தமையால், இராச மல்லன் என்னும் விருதுப் பெயரைப்பூண்டான். இவன் (பரம) ஈசுவர போத்தரசனைத் தோற்கடித்தான்; தென் நாட்டின் ஒட்டியாணமாக விளங்கும் காஞ்சியைக் கைப் பற்றினான். அதன் பெரிய மதிற்கூவர் ஏற முடியாததும் உடைக்கக் கடினமானதும் ஆகும். அம்மதிலைச்சுற்றித் தாண்ட முடியாத ஆழமான அகழி இருந்தது,” என்பது.

(3) விநாயதித்தன் வெளியிட்ட ‘சோரப்’ பட்டயம் கூறுவது; “பல்லவர் கோவைத் தோற்கடித்த பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சியை அடைந்தான்."[1] என்பது. ‘கேந்தூர்ப்’ பட்டயம். “தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்,” என்று கூறுகிறது.[2]

பல்லவர் பட்டயங்கள்

(1) பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயம் கூறுவது: “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல இலக்கம் வீரரைக் கொண்ட விக்கிரமாதித்தனை, கந்தையைச் சுற்றிக் கொண்டு ஓடும்படி செய்தான்,”[3] என்பது.

(2) இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘உதயேந்திரப்’ பட்டயம் உரைப்பது; “பரமேசுவரவர்மன்பெருவளநல்லூரில் நடந்த பெரும் போரில் வல்லபன் (விக்கிரமாதித்தன்) படையை முறியடித்தான்,”[4] என்பது.

(3) மூன்றாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘வேலூர் பாளையப்’ பட்டயம் பகர்வது; பரமேசுவரவர்மன் தன் பகைவர் அகந்தையை


  1. Heara’s “Studies in Pallava History’ pp.40-41.
  2. Ep.Ind Vol. IX, p.205 200.
  3. S.L.I.Vol. I. p.154
  4. Ibid II p.370