பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

பல்லவர் வரலாறு



கூரம்-கோவில் (முதற் கற்கோவில்)

பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றுரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் ‘பரமேசுவர மங்கலம்’ எனத் தன் பெயர் பெற்ற சிற்றுரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுரவ க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.[1]

இப்பொழுது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவன் காலத்திலும் நடந்து வந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். கோவிலில் பாரதம் சொல்லச் செய்த அரசன் இவன், கூரம் பட்டய முதல் இரண்டு சுலோகங்கள் பரமேச்சுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன.

மகாபலிபுரம்

இவன் மகாமல்லபுரத்தில் கணேசர் கோவில் ஒன்றை ஒரு கல்லால் அமைத்தான்; இராமநுசர் மண்டபம் என்பதையும் அமைத்தான்; தர்மராசர் தேரின் மூன்றாம் அடுக்கை முடித்தான்; அந்த அடுக்கில், ‘ரணசயன் (ரண ரசிகனானா விக்கிரமாதித்தனை வென்றவன்), ‘அத்யந்தகாமப் பல்லவேசுவர க்ருகம் என்பவற்றை வெட்டுவித்தான். இவற்றால், இவன் ‘ரணசயன்’ ‘அத்யந்தகாமன்’ என்னும் பெயர்களைத் தரித்தவன் என்பது புலனாகிறது. இவன் கணேசர் கோவிலில் வெட்டுவித்த 11 வடமொழிச் சுலோகங்கள் படித்து இன்புறத்தக்கவை. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும்படி சிலேடையாக அமைந்தவை. அவற்றுட்சில கீழே காண்க:

சிறந்த சிவபத்தன்

(1) காமனை அழித்த சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் காரணன்; இவன், அகாரணனான அத்யந்தகாமனுக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பானாக.


  1. C.Srinivasachari’s History & Institutions of the Pallavas p.15.