பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

பல்லவர் வரலாறு



வந்தன. கங்கபாடியில் இருந்த இம் மடங்களில் சமணம், பெளத்தம், தர்க்கம், காவியம், இலக்கணம், நாடகம், பரதசாத்திரம் முதலிய பல கலைகளில் வல்லுநர் இருந்தனர்என்றுகங்கநாட்டுக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. எனின் ஏறக் குறைய அக் காலத்தில் பேரரசராகவும் சிறந்த கலைகளில் நிபுனராகவும் இருந்த பல்லவப் பேரரசருடைய பெரு நாட்டு மடங்களில் இக் கலைகள் பயிற்றுவிக்கப்பெற்றன என்பது கூறாதே அமையும் அன்றோ?

சைவ மடங்கள்

சைவ மடங்களுள் காபாலிக மடம், பாசுபத மடம், காளாமுக மடம் எனப் பலவகை இருந்தன. காபாலிகர் மடம் காஞ்சி-ஏகாம்பரநாதர் கோவிலை அடுத்து இருந்தது என்பதை மந்தவிலாசத்தைக் கொண்டு குறிப்பாக உணரலாம். காஞ்சியில் பாசுபதர் இருந்தனர் என்று அதே மத்தவிலாசம் கூறலால், அவர்கட்கும் தனி மடம் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. மயிலாப்பூர் கபாலீசர் கோவிலில் அல்லது அதனை அடுத்துக் காபாலிகர் மடம் இருந்திருத்தல் வேண்டும். கொடும்பாளுர் முதலிய இடங்களிற் காளாமுகர் மடங்கள் இருந்தன. இவற்றுள் பின்னவர் வைத்து நடத்திய மடங்களே சிறப்பெய்தின என்றுகங்கநாட்டு வரலாற்றைக்கொண்டு உணரலாம்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில்-அப்பர், சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 20 தளிகளின் மடங்கள் இருந்தன என்பதையும், அப்பூதி அடிகள், குங்குலியக் கலயர், முருக நாயனார், சம்பந்தர், அப்பர் முதலியோர் மடங்கைளஏற்படுத்தினர் என்பதையும் வரலாற்றுச் சிறப்புடைய பெரிய புராணத்திலிருந்து நன்கறியலாம். இவற்றிற்குப் பட்டயச் சான்று இல்லை. (சோழர் காலத்துப் பட்டயச் சான்றுகள் உண்டு) எனினும் இவை இருந்திருத்தல் வேண்டும் என்பதைமெய்ப்பிப்பனபோல, (சுந்தரருக்குமுற்பட்ட நந்திவர்மன் காலத்துப் பட்டயம் ஒன்றில்-கச்சி மேற்றளியைச் சார்ந்த மடம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மேற்றளியிற் பாடுங்கால் அப்பர் ‘கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்’ என்று கூறலை நோக்க, அவர்