பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நரசிம்மவர்மன்

123



அவர்கள் இட்ட பெயர்களையே இன்றளவும் அறிஞர் எழுதி வருகின்றனர். எனவே, அம்முறைப்படியே நாமும் குறிப்போம். இந்த ஐந்து தேர்களும் வேறு வேறு அமைப்புடையவை. இவை தமிழகத்தில் மண், செங்கல், மாம் இவற்றில் ஆகி அந்நாள் இருந்த பழைய கோவில்களை நமக்கு நினைப்பூட்ட அமைத்தவை ஆகும். இந்த ஐந்தும் இராவிடில், பழங்காலக் கோவில்களைப் பற்றிய எண்ணமே நமக்கு இராது போயிருக்கும்.[1] மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கோவில்களில் பல் வேலைப்பாடுகள் இருந்தன. அவை இக் கற்கோவில்களில் அப்படியே காணப்படுகின்றன. மரவேலைகள் எல்லாம் கல்லிற் செதுக்கிக் காணப்பட்டன. திருச்சிராப்பள்ளியில் மகேந்திரவர்மன் குகைக்கோவில்கள், மரத்தால் எளிதிற் கட்டும் வேலி கல்லில் செதுக்கப்பட்டுள்ளது காண்க. நாமக்கல் கோவிலில் வளைந்த மூங்கில்களை வைத்து இறக்கப்பெற்ற தாழ்வாரம் போன்ற அமைப்பை மலையில் குடைந்துள்ளமை காண்க. திருச்சிராப்பள்ளியில் உள்ள கீழ்க் குகைக்கோவிலில் மரவிட்டம் போலக் கல் நீட்டிக்கொண்டிருத்தல் காணத்தக்கது.[2]

(1) தருமராசன் தேர்:- இது சிவன்கோவில், இது மூன்று தட்டுக்களைக் கொண்ட மேற்பாகத்தை (விமானத்தை) உடையது இரண்டாம் தட்டின் நடுவில் உள்ளிடம் வெட்டப் பட்டுள்ளது. அது மாடப்புரைபோலச் சிறியது. அதன் அடியில் சோமாஸ் கந்தச் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் கும்ப (விமான) வளர்ச்சியே காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பம் ஆகும். அதன் வளர்ச்சியே தஞ்சைப் பெரியகோவில் கும்பமாகும். இம் மூன்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர் இவ்வுண்மையை நன்கு உணரலாம்.

(2) பீமசேனன்தேர்:- இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் காஞ்சியில் உள்ள அமைப்பைப் பெரிதும் ஒத்துள்ளன. எனவே, இக் கோவில் அக்காலத்தில் பெளத்த சமயக் கலைவளர்ச்சி தென்னாட்டில்


  1. Heras’s “Studies in Pallava History,” p.89 188.
  2. P.T.S. Iyengar’s “pallavas’ part II, pp.41-43.