பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரமேசுவரவர்மன்

133



முன்னதைத் தோற்கடித்திருக்கலாம். தோற்ற படை கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது. உடனே சாளுக்கியர் படை அரிதின் முயன்று அகழியைக் கடந்தது ஏறமுடியாத மதில் மீது முயன்று வருந்தி ஏறியது; மதிலைத் துளைத்தது; இறுதியிற் காஞ்சியைக் கைப்பற்றியது... பரமேசுவரவர்மன் தப்பி ஒடிவிட்டான். அதனால் எதிர்ப்பவர் இன்றிச் சாளுக்கியன் தன் பெரும்படையுடன் பல்லவநாடு முழுவதும் கற்றுப்போக்குச்செய்து, இறுதியில் காவிரிக் கரையில் உறையூரில் வந்து தங்கினான். அவன் அப்பொழுதுதான் தான் அடைந்த வெற்றிக்கறிகுறியாகக் ‘கத்வல்’ பட்டயம் (25-4-674 இல்) வெளியிட்டான்.

“இதற்கு இடையில் பரமேவரவர்மன் ஆந்திர நாடு சென்று, பெரும்படை திரட்டித் தெற்கே வந்து, தன் வெற்றியில் வெறி கொண்டிருந்த சாளுக்கியனைத் திடீரென எதிர்த்தான்; போர் பெருவள நல்லூரில் கடுமையாக நடந்தது. (இப்போரின் கடுமையைக் கூரம் - பட்டயம் தெளிவாக விளக்குகிறது) போர் பல நாட்கள் நடந்தன. இறுதியில் பல்லவப்பேரரசன்வெற்றிபெற்றான். இருதிறத்தார்க்கும் கடுமையான இழப்பு (நட்டம்) உண்டானது. சாளுக்கிய மன்னன் புறங்காட்டிஓடி ஒளிந்தான்.”[1]

கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று “பரமேச்சுரன் வாதாபியை அழித்தான்’ எனக் கூறலால், ‘இவன் விக்கிரமாதித் தனைத் துரத்திச் சென்று, நரசிம்மனைப் போலவே சாளுக்கியர் தலைநகரையும் அழித்து மீண்டான்’ என்பதை அறியலாம்.[2]

போர் வருணனை

இப் போரைப்பற்றிக் கூரம்-பட்டயம் வருணித்தல் காண்க: “கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் நடந்து சென்றமையாற் கிளம்பிய துளி கதிரவனை மறைப்பக் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் மங்கியது. முரசொலி இடியோசைபோல


  1. Vide his “Studies in “Pallava History pp.44-47.
  2. C.S.Srinivasacharl’s “History and Institution of the Pallavas’ p.15.