பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

பல்லவர் வரலாறு



கட்டினர். கடைகளில் விற்கப்பட்ட பழைய பாக்கு மரங்களிலும் அரசாங்கம் பங்கு பெற்று வந்தது. ‘கல்லால மரம்’[1] பயிரிடச் சிற்றுாரார் அரசாங்கத்தினிடம் உரிமை பெற வேண்யிருந்தது. அவ்வுரிமைக்குச் சிறு தொகை செலுத்தவேண்டி இருந்தது; அது ‘கல்லால் காணம்’ எனப்பட்டது.

மருந்துச் செடிகள்

செங்கொடி (செங்கொடி வேலி அல்லது சித்திர மூலம்) என்பது மிகச் சிறந்த மருந்துக்கொடி. இது பல வகை நோய்களையும் இரணங்களையும் போக்க வல்ல ஆற்றல் பெற்றது. இதனைப் பயிரிடுவோர் உரிமை பெறவேண்டும். இதற்குச் செலுத்தப்பட்டவரி செங்கொடிக் காணம் எனப்பட்டது. ‘கருசராங் கண்ணி’ என்பதும் சிறந்த பயன்தரும் செடியாகும். அது பல நோய்களை நீக்க வல்லது. இச் செடியைப் பயிரிட அல்லது விற்க உரிமை தரப்பட்டது. அவ்வுரிமை பெறச்செலுத்தப்பட்ட தொகை கண்ணிட்டுக் காணம் எனப்பட்டது.

மருக்கொழுந்து முதலியன

பல்லவர் காலத்துக் கடல் வாணிபம் கிழக்கிந்தியத் தீவுகளிலும் சீயம், சீனம் முதலிய நாடுகளிலும் பரவி இருந்தது. அதனால் சீனத்திற்கு உரிய ‘மருக்கொழுந்து’ இங்குக் கொணரப்பட்டுப் பயிரிடப்பட்டதாகும். இதனைப் பயிரிடப் தேவதான - பிரம்மதேயச் சிற்றுர்கள் உரிமை பெற்றிருந்தன. பிற சிற்றுார்கள் அரசாங்க உரிமை பெற்றே (வரிசெலுத்தியே) பயிரிடவேண்டியவை ஆயின.

‘நீலோற்பலம்’ எனப்படும் குவளைச் செடிகளை நடுவதற்கும் உரிமைபெற வேண்டும்; விற்பதற்கும் அரசினரிடம் உரிமை பெற வேண்டும். இவை முறையே ‘குவளை நடு வரி’ எனவும், குவளைக் கானம்’ எனவும் பெயர் பெற்றன. இக் குவளை மலர் பூசைக்கும்


  1. ‘கல்லால் நிழல்கீழ் அறங்கள் உரைத்த அம்மானே'- சுந்தரர் தேவாரம், - திருக்கச்சூர் ஆலக்கோவில் பதிகம். கல்லால் மரம் செங்கற்பட்டை அடுத்த செம்பாக்கம் மலையில் இருக்கிறது.