பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அறிவுக்




855.சிறுவர்க்கான பிரதமக் கல்வி அறிவு ஊட்டுவதன்று. நல்ல வழக்கங்கள் அமைப்பதே யாகும்.

போனால்டு

856.மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானைவிட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது.

கதே

857.பொய்க் கல்வி பெருமை பேசும்; மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும்.

ரஸ்கின்

858.மூடர்முன் முற்றக் கற்றவனாகக் காட்சிக் கொள்ள விரும்புகிறவன் முற்றக் கற்றவர்முன் மூடனாக்க் காட்டிக் கொள்கிறான்.

குன்றிலியன்

859.அதிகம் கற்றவரே அற்பமாகவே தெரியும் என்று அறிந்து கொள்ளக் கூடியவர்.

ஆவ்பரி

860.இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு—பிறரிடம் பெறுவது ஒன்று; தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது.

கிப்பன்

861.யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார்.

கதே