பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

45



வி: பேச்சாளர்கள் எல்லாம் செயலாளர்களாக மாறவேண்டிய சீர்திருத்தம் முதலில் தேவை. காரணம், மலையளவு பேசுவதைவிடக் கடுகளவு செய்வது நல்லது என்பதே.

கே:தமிழ்மொழி உலகத்திலுள்ள மற்றெல்லா மொழிகளையும்விடத் தலைசிறந்ததென்று சொல்லப்படுகிறது. அதன் எந்த அமிசம் ஆங்கிலம் முதலான ஏனைய மொழிகளைவிடச் சிறந்தது?

வி: இந்த வினாவுக்கு விடைகூறப் பலமணி நேரம்வேண்டும். ஆயினும், சுருக்கமாகச் சொல்கிறேன். (அ) இனிய மொழி, எளிய மொழி, சிறந்த மொழி, பழைய மொழி, தனித்த மொழி என்ற இந்த ஐந்து அடைமொழிகளுக்கும் தமிழ் ஒன்றுதான் தகுதியானது. (ஆ) ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணம் பெற்றது.இம்மொழி. (இ) கண்ணால் காணப்படாத மனத்தான் நினைக்கப்படுகின்ற பொருள்களுக்கும் இலக்கணம் கூறுகின்ற அகப் பொருள் இலக்கணத்தைக் கொண்டது. (ஈ) பிறமொழிகளில் காணப்படாத'ழ' என்று ஒலிக்கும் எழுத்தைக் கொண்டது. (உ) ஒழுக்கத்தை மட்டும் வற்புறுத்திக் கூறும் தனி நூல்கள் பலவற்றைக் கொண்டது.ஆகிய இவ் ஐந்தும் தமிழ் மொழிக்குள்ள தனிச் சிறப்புகளாம்.

கே: இப்போது இளைஞர்களாற் கையாளப்படும் அடுக்குமொழி, எதுகை மோனை நிறைந்த பேச்சுகளைப் பற்றி உங்கள். கருத்தென்ன?

வி: அத்துறையில் கொஞ்சம் கருத்தும் கலந்திருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. ஒரு நல்ல பேச்சுக்கடையாளம், கேட்பவர் மனத்தில் கருத்துக்கள் பதிவது. கருத்துப் பதியாத பேச்சு, வீராவேசத்துடனோ, உணர்ச்சியுடனோ, உயர்ந்த ஒலியுடனோ, அடுக்குமொழி எதுகை மோனை, அழகு ஆரவாரம் என்பவற்றுடனோ இருந்தாலும் சிறந்த பேச்சாகாது.

கே: உங்களுடைய கனவில் பூதமோ, பிசாசோ தோன்றக் கூடுமானால், அவற்றிடம் என்ன கேட்க முயல்வீர்கள்?

வி: கனவு என்பது நினைவின் மறு பதிப்பு மனம் ஒன்றை நினைத்தால் தான், அது கனவில் தோன்றும். என் நினைவில்