பக்கம்:அலைகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 O லா. ச. ராமாமிருதம்


திடீரெனக் குனிந்து, கடித்தவிடத்தில் முத்தமிட்டாள். அதைக் கண்டதும் என் உடல் முழுவதும் புல்லரித்து, ஒரு இன்ப பயங்கரம் கால் கட்டை விரலிலிருந்து மண்டை உச்சிவரை ஊடுருவிற்று. நான் மூர்க்கவசமானேன். கண்ணனை இழுத்து. அணைத்து முத்தமிட்டேன்.

என் செயல்கண்டு அவள் மீண்டும் தன் பெண்ணை முத்தமிட்டாள். இருவரும் மாறி மாறி அவரவர் குழந்தைகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தோம்.

ரயில் அகன்ற மைதானத்தின் நடுவே போய்க் கொண்டிருந்தது.

உருவிழந்த ஆசைகள், உருக்குலைந்த ஆசைகள், உருமாறிய ஆசைகள், உருவுக்குக் காத்திருக்கும் ஆசைகள், உருக்கசந்த ஆசைகள், எல்லாம் சேர்ந்த வெறியாட்டங்கள் தன்மேலும், ஒன்றன்மேல் ஒன்றும் தம்தம் வஞ்சம்களைத் தீர்த்துக்கொண்டு, மீண்டும் தம்தம் உரு பிசு பிசுக்கவும், உருமாறவும், உரு அழியவும், உரு, பிறக்கவும் வசதியாய் அமைந்த பலிபீடம் போன்ற மைதானம்.

கீழ்த்திசையில் மேகங்களைப் பிளந்தவண்ணம் புறப்பட்டுக்கொண்டிருக்கும் ஒளி எரிமலைபோல் குமுறியது,

கண்ணன் கோபத்துடன் திமிர முயன்றான். 'உன் மூஞ்சி குச்சி குச்சியாக் குத்தறதப்பா! இதென்ன முத்தப் போட்டி-?”

அவளுக்கு மூச்சு இரைத்தது. அவளுடைய கரடியணைப்பில், அவள் குழந்தைக்கு விழிகள் பிதுங்கின.

ரயிலின் ஒட்டம் மெதுவடைய ஆரம்பித்து விட்டது. கண்ணனையும் கைப்பெட்டியையும் தூக்கிக்கொண்டேன். நான் இறங்கவேண்டிய இடம்.

நாங்கள் இறங்கிக் கொண்டேயிருக்கையில் திடீரென்று அவள் வாய்விட்டுச் சிரித்தாள். பாய்ச்சி கையியைக் குலுக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/258&oldid=1286515" இலிருந்து மீள்விக்கப்பட்டது