பக்கம்:படித்தவள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ராசீ



இன்று அவர்கள் பழகும் பழக்கம் வேலிகள் இடப்படும் கேலிக் கூத்துகள் ஆகிவிட்டன. ‘தனிப்பட்ட சுதந்திரம்’ என்று வேறுபட்டு இயங்குகின்றனர். என் குருதியில் பழைய உறுதிகள் நிலைத்து விட்டன. அவை சிதைந்து விடுமோ என்ற பதைப்பில் நான் அஞ்சுகின்றேன். புதுமை வேகத்தில் ஒரு பதுமையாக இருந்து என்னை அழித்துக் கொள்ள மாட்டேன். எதையும் ஆற அமரச் சிந்தித்தே என் வாழ்வை அமைத்துக் கொள்வேன்” என்று கூறினாள்.

“பண்ணை வீட்டாருக்கு உன்மேல் அபிப்பிராயம் உண்டாக்க முடியும்” என்று அறிவித்தேன்.

“அவசரப்பட வேண்டாம்” என்று என்னைத் தடுத்து நிறுத்தினாள்.

8

வள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினாள். அவள் விழிப்பு என் உறக்கத்தைக் கலைத்தது; படித்தவள் என்றால் அவளைப் பற்றித் தவறாகக் கருதியது உண்டு. ஆங்கிலம் பேசுவது நாகரிகம் என்று தமிழை மறக்கும் தாய்மையைக் கண்டது உண்டு.

நடிகை நங்கையர் நடிப்பது தமிழில். அவர்கள் தனிப்பட்ட உரையாடல்கள் ஆங்கிலம். எல்லாம் கான்வென்ட்டு படிப்புகள். இந்த மின்னல்களைக் காணும் எனக்கு இந்த மண்ணில் பூக்கும் மல்லிகைகளைக் காணும்போது மகிழ்வு ஏற்படுகிறது. மண்வாசனை மாறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/56&oldid=1139518" இலிருந்து மீள்விக்கப்பட்டது