பக்கம்:படித்தவள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

55



அவசரப்படவேண்டாம் என்று கூறியது அவள் எனக்கு இட்ட அறிவுரையாகப்பட்டது, நான் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை உணர்கிறேன். வயது ஆகிவிட்டால் பிறர் விவகாரங்களில் அக்கரை காட்ட வேண்டியுள்ளது. அதை மற்றவர்கள் எதிர் பார்க்கிறார்கள் வயது முதிர்வைத் தருகிறது. அதிர்வுகளை விலக்கி அணைப்புகளை ஏற்படுத்த முடிகிறது. மூத்தோர் சொல்வார்த்தை அமிழ்தம் என்று அறம் கற்றோர் சொல்லிக் கேள்விப்பட்டது உண்டு. எனினும் எதையும் சிந்தித்துக் கூறுவது தேவை என்றுபட்டது. ‘எண்ணித் துணிக கருமம்’ என்று இந்த அவ்வைப் பாட்டி எனக்குத் திருக்குறள் போதித்தார்.

9

மிகவும் கனமான விஷயமாகப் பிறை மதி எனக்குப் பட்டாள். லேசாக என் மனத்தை ஆற்றிக் கொள்ள விரும்பினேன்.

டி.வி. சானல்கள் மாற்றிப் புதிய நிகழ்ச்சிக்குத் தாவுவதைப் போன்றிருந்தது கதை தொடரும் வனிதையின் வருகை.

நூல்களைப் படிப்பதை விட மாந்தர் உரைகளைக் கேட்பதில் ஒரு மயக்கம் ஏற்படுகிறது.

அவள் கொண்டு வருவது அதே பண்டப் பொருள் தான்; சொல்லவருவது மண்டிய புதிய செய்திகள்.

பிள்ளைகளைப் பற்றிக் கேட்டேன். அதில் அவளைக் கிள்ளுவதற்கு எதுவும் இல்லை என்பதால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/57&oldid=1139520" இலிருந்து மீள்விக்கப்பட்டது