பக்கம்:படித்தவள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ராசீ


எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தேன்.

அவர் கேட்பதாக இல்லை.

11

வெளியூர் மாற்றப்பட்ட என் மகன் அடிக்கடி பணம் அனுப்பி வருகிறான். அதனால் வீட்டில் உபரிப் பணம் அபரிமிதமாகச் சேர்கிறது. காசும் பணமும் சேர்கின்றன. ஆசை மகன் அவன் ஒருவன்தான்; அதனால் அவனுக்கு ஒரு கால் கட்டுப் போடவேண்டும் என்று மருத்துவர்கள் நாங்கள் முடிவு செய்கிறோம்; அவன் உள்கட்டு என்ன என்று எங்களுக்கு எதுவும் பட்டென்று சொல்வது இல்லை. எந்தப் பெண் சொன்னாலும் அது ஏற்ற பெண் அல்ல என்று மறுத்துக்கொண்டே வருகிறான்.

எனக்கு ஒரு புதிய ஆசை, பிறை ஏன் என் வீட்டு மகா லட்கமியாக வரக்கூடாது;மருமகள் என்று சொல்லத் தக்க அரிய குணங்கள் அவளிடம் வேண்டிய அளவு இருக்கின்றன என்பதில் தெளிவான எண்ண ஓட்டம் என்னுள் ஒடிக் கொண்டிருக்கிறது.

என்னுடைய வீட்டுக்காரிக்கு அலையோசை வேறு எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிறது! அவள் படித்த பெண்; குடித்தனத்துக்கு ஆகாள்; தடித்தனம் இருக்கும் என்று மடத்தனமாக எண்ணுகிறாள். நிறம் இல்லை; அதனால் நம் தரத்துக்கு ஆகாள்; நிறம் மா; அது போதுமா என்று கேட்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/68&oldid=1139532" இலிருந்து மீள்விக்கப்பட்டது