பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துதி) திருப்புகழ் உரை 9 1 கையிடம் நிறையப், பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி யுன்ைனும் யானைமுகக் கடவுளின் அடியை விரும்பிக் கற்கும் அடியவர்களுடைய புத்தியில் உறைபவனே! கற்பகமே! என(க் கூறினால்) வினைகள் விரைவில் ஒடிப்போம் (ஆதலால்); ஊமத்தம்பூ நிலவு (இவைகளை) அணிந் துள்ள அரனார் மகனும், மற்போருக்குத் தகத் திரண்ட புயத்தையுடைய மதயானையும் மத்தள (ம் போன்ற) வயிற்றை உடையவனும், உத்தமி (பார்வதியின்) மகனும் (ஆகிய கணபதியை) வாசனை அவிழ்ந்து (வீசும்) ம்லர்கெர்ண்டு நான் ப்ணிவேன்; முத்தமிழை யெல்லாம், (மலைகளில்) முற்பட்டதான (மேரு) மலையில் முதல் முதலிற் பொருந்த் எழுதின் முதல்வோனே! மூன்று புரங்களையும் எரித்த அந்தச் சிவன் எழுந்தருளிய ரதத்தின் அச்சைப் பொடி செய்த மிக்க திரனே! (வள்ளியம்மைபாற் கொண்ட காதலாகிய) அத் துயரத்தொடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணி நடந்த அந்தப் புனத்திடை யானையாகி (த் தோன்றி) அந்தக் குறமகளாம் (வள்ளியுடன்) அந்தச் சிறிய முருக வேளை அப்பொழுதே மணம் புரிவித்த பெருமாளே! (உன்னை மட்டவி ழ் மலர்கொடு பணிவேன்). முடிபு: களிமுகன் அடிபேணி. அடியவர் புத்தியி லுறைபவ கற்பகம்: என வினை.ஏகும். (ஆதலால், யான்).அரன்மகன் .மதயானை (ஆகிய) மத்தள வயிறனை, உத்தமி புதல்வனை.மலர்கொடு பணிவேன். (என் செய்து, எதன் பொருட்டுப் பணிவேன் எனில்), முதல்வோனே..அதிதிரா. பெருமாளே! (எனத் துதிசெய்து, எடுத்துக்கொண்ட துதி நூலாகிய இப்பிரபந்தம் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டுப் பணிவேன் என்க.)