பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம்) திருப்புகழ் உரை 33 தினந்தோறும் நால்வேதமும் வல்ல 'முநி (பிரமன்) விதிப்படி நீராட்டிப் பூ நிறைய இட விண்ணவரும், சினத்தை நிந்தித்து விலக்கின (வெகுளியை வென்ற) முநிவர்களும் தொழ மகிழ்பவனே! தெனத் தெனத்தன என்று கோடுகள் உள்ள (ஆல்லது இசை பாடும்) வண்டுகள் தேனைத் தெவிட்டுமளவுக்கு சையுடன் உண்ணும் உயர்ந்த பொழில்(கள்) விளங்கும் நீங்குத் ல் உறைந்த்ருளும் சரவண மூர்த்தியே! பெருமாளே! (மறலிதன் உழையினர் பொருபோது என் பயமற மயில் முதுகினில் வருவாயே!) 6 கரிய மை(யிட்ட) விழியிணையாழ் வேல் கொண்டு நெருக்கி நெஞ்சம் அழியும்படி எறியும்பொழுது, ஒரு பழச் சுவையையும் அமுதத்தையும் கக்குகின்ற ஒப்பற்ற புன்னகையாலே கழுத்தில் (நின்று எழும்) வளமான ஒலியெனும் வலையை வீசியே வீட்டுக்கு எழுந்திருங்கள்' - என்று (கூறி) மன முருகும்படியாகவும் ஒரு கவலை கொள்ளும்படியாகவும் வீட்டுக்குள் அழகாக அழைத்துக்கொண்டு போய், மணந் தோய்ந்த பஞ்சணையின் மேலே மணம் பொருந்த அன்னத்து ம்ார்பில் முலையினை எதிர்பொர நகம் அழுந்த இதழமுதைப் பருகியும், கண்டத்துாடே நடித்து எழுகின்ற குரல் குமு குமு குமு என ஒலிசெய்து நன்றாக, மனம் கலங்கும்படி பசிப்பி, மயக்கும் விடம் போன்ற சிறுமிகளால் (வரும்) துயர் நீங்க அருள்வாயே; 1. அருநெறிய மறை வல்ல முனி. தேவாரம் சம்பந்தர் பிரமபுரம் I - 1-கக. 2. அருமா மறை வல்ல முனிவன் - தேவாரம்: சம்பந்தர் சிக்கல் II.-8 — 9. 蔷