பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347


இப்பனை, உள்ளங்கால் முதல் உச்சந் தலைவரை, அஃதர் வது வேர் முதல் குருத்து வரை எல்லா உறுப்புகளாலும் மாந்தர்க்குப் பயன்படும் ஒன்று. கும்பகோணத்தில் வாழ்ந்த அருணாசலப் புலவர் என்பார் இதன் பயன்பற்றித் தாலவிலாசம்’ என்றொரு நூலே எழுதியுள்ளார். 801 வகைகளில் இது பயன்படும் என்று எழுதியுள்ளார். இக்குருத்து ஒலையை, அஃதாவது தாலத்தை மடித்து மாறு மடிப்பில் பின்னி, நூலில் கட்டிக் குழந்தைகளின் கழுத்தில் தொங்க விடுவர். இது நோய்த்தடை. கழுத்தில் அது அசைந் தாடும். தாலத்தால் ஆடும் இது தாலி எனப்பட்டது. இதனால் கழுத்தில் அசைந்தாடும் கழுத்தணிகள் ஐம்படைத்தாலி', 'மங்கலத்தாலி' என்றும் பெயர் பெற்றன. இத்தாலம் போன்ற அமைப்புள்ளது நமது நா. இதனால் நமது நாவிற்கும் தால் என்னும் பெயர் அமைத்தது. இத்தாலை ஆட்டி இசையெழுப்பிக் குழந்தைகளை உறங்கவைத்தனர். நாவை-தாலை ஆட்டி இசைப்பதால் இப்பாட்டு தாலாட்டு’ ஆயிற்று. 'தாலோ தாலேலோ” என்று தாலாட்டு பிறந்தது. அதனைக் கேட்கும் பிஞ்சுப் பருவமும் தாலப் பருவமாயிற்று. போந்தை என்னும் சொல்லும் குறிப்பெயராகியது. போந்தை” என்று ஒர் ஊக் பெயர் பெற்றது. அஃது ஆதன் என்பானுக்கு உரிய ஊர் சீரும் ஆரவாரமும் மிக்க ஊர். "நெடுவேள் ஆதன் போந்தை அன்ன பெருஞ்சீர் ஆகும் கொண்டியளே' என்று பாடினார் குன்றுர் கிழார் மகனார். இவ்வூரில் வாழ்ந்த சங்கத்துப் பெண் பாற் புலவர் போந்தைப் பசலையார்' எனப்பட்டார். பனையின் பெயரால் பனையூர், பனங்காடு எனப் பல ஊர்ப் பெயர்கள் எழுந்தன. கிளையும் நிழலும் அற்ற இதன் அடியில் சிவபெருமான் இடம் பெற்றார். இதனால் இவ்விடம் "திருப்பனந்தாள் என்னும் ஊராயிற்று. இங்குள்ள கோவிலின் "திருமரம் பனை. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பெரும்புலவர் பனை என்னும் சொல்லமைந்த பனம்பாரனார் என்னும் பெயரினர். இங்கு விளக்கப்பட்டவை யாவும் பனைக்குப் பாயிரமே என்னலாம். பெருமை விரிவானது. சேரன் குடிப்பூ என்ற தொடர்பில் இத்துணைச் செய்திகளை அறிய முடிகின்றது. | புறக்: 888 : 4 கி.