பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612


"தீங்கரும் பீன்ற திரள் கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தாங்கு -ஒங்கும் உயர்குடியுட் பிறப்பின் என்னாம் பெயர்பொறி க்கும் பேராண்மை இல்லாக் கடை' -என்று பாடி உயர்குடியில் பிறப்பினும் பேராண்மை இல்லாமைக்கு உவமையாக்கினார். இஃது இப்பூ தன் தாய்க்குப் பெற்றுத்தந்த சிறுமையாகும். மற்றொரு வகையிலும் இப்பூ விரும்பப்படாத ஒன்றாகும். கரும்பில் இது பூப்பதால் அதன் சாற்றுப் பிடிப்பு குறைவதை எண்ணிப் பயிரிடுவோர் பூப்பதை விரும்பார். இதற்குக் கரணியம் இதன் பூவொன்றிலேயே ஆண் பெண் உறுப்புகள் இணைந் திருக்கின்றமையுமாகும். என்னதான் மணமற்ற நாறா வெண்மலர் ஆயினும் வேலின் தோற்றம்போல விளங்கும் கரும்பின் ஒண்பூ அசை யும் நாடெனப்படுவது நினதே' என நாட்டு வளம் கரும் பால் குறிக்கப்படும். நாறா வெண்மலராகிய இது நாட்டு வளத்தின் அறிகுறிப் பூவுமாகும். 34. வெண்கவரி மலர். வேழம். 'வேழம்" என்பது பலபொருள் ஒருசொல். யானை, ஒர் இசை, மூங்கில் கரும்பு, கொறுக்காந் தட்டை ஆகியவற்றைக் குறிக்குஞ் சொல். இவற்றுள் மூங்கில், கரும்பு, தட்டை மூன்றும் கரும்பிற்கும் வேழத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டோம். அதுபோன்றே வேழமும் மூங்கிலும் வேறுபாடு உடை யவை. ஆனாலும், வேழம், வடிவமைப்பாலும் உள் கூட்டாலும் மூங்கில் போன்றதாகையால் மூங்கிலையும் குறிக்குஞ்சொல்லாயிற்று. 'காம்பு (மூங்கில்) கண்டன்ன தூம்புடை வேழம் 3 என்னும் அடியும் மூங்கில் தொடர்பைக் காட்டுகின்றது. "தூம்புடை வேழம்" என்றது உள் கூடாக இருப்பதைக் குறிப்பதாகும். யானை தன் முகக்கையைத் துரம்புஎன்னும் உள்துளையுடையதாகப் பெற்றுள்ள தால் அதற்கும் இச்சொல் அமைந்தது. எனவே, "வழை' 1 நாலடி .199. 3 ஐங் : 20 - 8