பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம்-2 2 r。 துேப்பிய பிறகு சோர்ந்து களைப் படைந்து ஒய்ந்து தனது கட்டிலில் ஏறிப்படுத்து, "அப்பாடா” என்று நல்லமூச்சாக விடத் தொடங்கினாள். அன்றையதினம் காலையிலிருந்து வதை பட்டுக் கொண்டிருந்த அவளது மாந்தளிர் மேனியும், புண்பட்டுக் கொண்டிருந்த அவளது மனமும் அப்போதே ஒருவித அமைதி அடைந்தன. அப்படியே அவள் சிறிது நேரம் சயனித்திருந்து களைத்துத் தெளிந்தவளாய் எழுந்தாள். மறுநாளைய இரவில் ஒன்பதுமணிக்குத் தான் புறப்பட்டு அந்த ஊர் இளவரசரது அந்தப்புரத்திற்குப் போக வேண்டுமென்ற நினைவில் உண்டான மனவெழுச்சி அப்போதே எழுந்து அபாரமாகப் பொங்கியது. அதன் பெருக்கையும் மும்முரத்தையும் தாங்கமாட்டாமல் அவளது மனம் நிரம்பவும் சஞ்சலம் அடையத் தொடங்கியது. அவளது உடம்பு மிகுந்த துடிதுடிப்பை அடைந்து தவித்துக்கொண்டிருந்தது. அந்தத் தோகை மடமயிலாளுக்கு அந்த இரவில் பசி, தாகம், தூக்கம் முதலிய எவ்வித தேகபாதையும் தோன்றாது இருக்க, அவளது வயிறு, மனம் முதலியவைகள் ஆனந்தமாக நிறைந்திருந்தன. அவ்வாறு அவள் அன்றைய இரவைப் போக்கினாள். மறுநாளைய பகல் முழுதும் அவள் அதே மாதிரியாக இன்பமோ துன்பமோ என்று அறிய இயலாத மகா சஞ்சலமான நிலைமையில் இருந்ததன்றி, தான் அன்றைய தினம் இரவில் இன்னின்ன ஆடையாபரனங்களை அணிந்து தன்னை எப்படி அலங்கரித்துக்கொள்வது என்பதைப் பற்றித் திட்டம் போட்டு, அப்போது முதலிருந்தே தன்னைப் பலவிதமாக அலங்கரித்து நிலைக்கண்ணாடியில் பார்த்துப் பார்த்து, கூட்டிக் குறைத்துக் கலைத்து அழித்துப் புதுக்கிப் பலவகையான திருத்தங்கள் மாறுபாடுகள் முதலியவைகளைச்செய்து கடைசியாக, இன்னவிதமாகத்தான் தன்னை அலங்கரித்துக் கொள்வது என்பதைப் பற்றி அவள் ஒரு முடிவிற்கு வர அன்றைய தினம் மாலைவரையில் பிடித்தது. அதற்குமேல், அவள்தண்ணீருக்குப்பதிலாகப் பன்னீரைப் பெரிய தொட்டியில்