பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


அவர்கள் அவர்களை விட்டே விலகியதை எண்ணும்போது செடி யிலேயே வாடுகின்றேன். தமிழரது பொன்னான பண்பாட்டை யும் மரபுகளையும் கொல்லுவதற்கு வேற்றார் தமது செயற்கை மரபுகளை இடைச்செருகலாகப் புகுத்தியதையும் பாவேந்தர் எண்ணுகின்றார். என்னை வைத்துப் பாடுகின்றார்: "செயற்கை மலர்காட்டித் தேன்மலர் இனம்கொல்லத் தெரியார் முயல்கின்றார் தெரிவையே’ போதும், இதழ் வகை 'பொன்னாங் கண்ணிக்குத் தாழம்பூவா? அஃது எவ்வாறு? கண்ணி ஆடவர்க்கு உரியது என்றாய். ஆடவர் தாழம்பூவைச் சூடுவதில்லையே' என்கின்றீர்களா? தாழம்பூவை ஆடவரும் சூடுவர்; மகளிரும் சூடுவர். அதைத் தெளிவுபடுத்துவது போன்று தான் இப்பாட்டில் முதலில் கண்ணிக்குத் தாழம்பூ என்று ஆடவர் சூடுவதையும். இறுதியில் கொண்டைக்குத் தாழம்பூ என்று பெண்டிர் சூடுவதையும் காண்கின்றோம். கொண்டை மகளிர்க்கு உரிய முடி அன்றோ? : இரண்டிடத்தில் குறிக்கப்பட்டதற்கு வேறு ஒரு கருத்தும் சொல்ல வேண்டும். முன்னது ஆடவர் சூடும் செந்தாழை, பின்னது பெண்டிர் சூடும் வெண்டாழை. ஆடவர் சூடார் என்பது கதை. "கதை கதையாம் காரண மாம்; காரணத்தில் ஒரு தோரணமாம்” என்பர். இக்கதை தோரணம் கட்டிய காரணக் கதை. எவர் பெரியவர் என்னும் போட்டியில் சிவன் வானில் வளர்ந்தார். நான்முகன் அவர் முடியைக் காண அன்னமாய்ப் புறந்தார். முடியிலிருந்த தாழப் பூ கீழே வீழ்ந்து வந்தது. இடை யிற் கண்ட நான்முகன் தான் முடியைக் கண்டு அதற்கு ச் சான்றாக தாழம்பூவை எடுத்து வந்ததாகப் பொய்ச்சான்று கூற வேண்டினார். தாழையும் அதற்கு உடந்தையாயிற்று. அதனால், சிவன் ஆடவர் சூடாது போக என்று தண்டித்தார். இந்தக் கதை கடவுளரையே தன்முனைப்புள்ளவர், பொய்யூர் என்று